சூட்கேஸில் இளம் பெண்... அதிர்ச்சியில் ஜார்ஜியா அதிகாரிகள்!

சூட்கேஸில் ஒளிந்தபடி சென்று முறைகேடாக துருக்கியில் குடியேறிட முயன்ற இளம்பெண் விமான பாதுகாப்புப் படை வீரர்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
 | 

ஜார்ஜியாவிலிருந்து துருக்கிக்கு புறப்பட இருந்த விமானத்தில் இளைஞர் ஒருவர் செல்ல காத்திருந்தார். அப்போது அவரது உடைமைகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர். அவரது சூட்கேஸை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.   இளம்பெண்  ஒருவர் சூட்கேஸினுள் ஒளிந்திருந்தது தெரிய வந்தது.  விசாரணையில் அந்த பெண் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 

மேலும், அந்தப் பெண்ணுக்கு துருக்கியில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால், சூட்கேஸில் ஒளிந்து சென்று துருக்கியில் குடியேற முயன்றதாக அவர்கள் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.  

அதிகாரிகள் சோதனையிடும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அதில், வெள்ளை நிற உடை அணிந்த பெண் ஒருவர் பெரிய சூட்கேஸில் குனிந்தபடி சுருண்டு படுத்து ஒளிந்துகொண்டிருப்பதும். பின்னர் அதிகாரிகள் சூட்கேஸை திறந்ததும் அவர் வெளியே எழுவதுமான காட்சிகள் பதிவாகியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP