தகவல் முறைகேடு: பேஸ்புக் மீது அபராதம் விதித்தது பிரிட்டன்!

லட்சக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதற்காக பேஸ்புக் நிறுவனம் மீது விசாரணை நடத்தி வந்து பிரிட்டன் அரசு, சுமார் 4.75 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
 | 

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் தகவல் திருட்டு மோசடி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படடுத்திய பின், சமீப காலமாக பேஸ்புக் மீது பல்வேறு நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களின் தகவல்களை, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வரிசையில், பிரிட்டன் தகவல் தொழில்நுட்பத் துறையும் பேஸ்புக்கை விசாரித்து வந்தது. 

இந்த விசாரணையின் முடிவில், 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் போதிய அனுமதி வாங்காமல், அவர்களது தனிப்பட்ட தகவல்களை, ஆப் நிறுவனங்களிடம் பேஸ்புக் வழங்கியதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைக்காமல் இருந்ததாகவும் பேஸ்புக் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2015ம் ஆண்டு, பேஸ்புக்கின் தகவல்கள் திருடப்பட்ட பின்னும் கூட, தங்களது பாதுகாப்பு கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் பேஸ்புக் இயங்கி வந்ததாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, பேஸ்புக் மீது, அதிகபட்ச அபராதமாக, 5 லட்சம் பவுண்டுகள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 4.75 கோடி ருபாய் விதித்துள்ளது பிரிட்டன் அரசு. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP