அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிவிதித்த துருக்கி அதிரடி

அமெரிக்காவில் உற்பத்தியாகி வரும் கார், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை துருக்கி அதிரடியாக அதிகரித்துள்ளது. துருக்கியின் இந்த செயல் மிகத் தவறான முடிவு என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
 | 

அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிவிதித்த துருக்கி அதிரடி

அமெரிக்காவில் உற்பத்தியாகி வரும் கார், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை துருக்கி அதிரடியாக அதிகரித்துள்ளது. துருக்கியின் இந்த செயல் மிகத் தவறான முடிவு என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

துருக்கியின் இரும்பு, அலுமினியம் போன்றவற்றின் இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியது. இதன் காரணமாக அந்நாட்டின் பணமதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.  இதோடு துருக்கியை சீண்டிய ட்ரம்ப், "துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளேன்.  டாலருக்கு முன், துருக்கியின் லிரா சரிந்துள்ளது. துருக்கியுடனான நமது உறவு சுமுகமாக இல்லை"  என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் துருக்கியில் இறக்குமதி ஆகும் அமெரிக்கப் பொருட்களான கார், மதுபானம், புகையிலை ஆகியவற்றுக்கான வரியை அதிகரித்து அமெரிக்காவுக்கு துருக்கி பதிலடி கொடுத்துள்ளது. 

இதனை விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், "இந்த முடிவுக்கு துருக்கி நிச்சயம் வருத்தப்படும். வரியை உயர்த்தி துருக்கி தவறான முடிவை எடுத்துள்ளது" என்று கூறியுள்ளார். 

முன்னதாக ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதனால் அதன் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. அதோடு ஈரானு மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை துருக்கி கண்டித்தது.  மேலும், ஈரானிடம்  இருந்து  கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்றும்  துருக்கி திட்டவட்டமாக தெரிவித்தது. 

எனவே தற்போது துருக்கி மீதான வரிவிதிப்புக்கு இரானுடன் இணக்கமாக போனது தான் காரணம் என்றும் பலதரப்பும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP