பனிப்போர் முடிந்தது: ட்ரம்ப் - புடின் கைக்குலுக்கலும் கால்பந்து பரிசும்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா உடனான பனிப்போர் நிறைவு பெற்றதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
 | 

பனிப்போர் முடிந்தது: ட்ரம்ப் - புடின் கைக்குலுக்கலும் கால்பந்து பரிசும்

 அமெரிக்கா மற்றும் ரஷ்யா உடனான பனிப்போர் நிறைவு பெற்றதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

பிரிட்டன் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பின்லாந்து சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹெல்சிங்கியில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். இந்த முக்கிய நிகழ்வை அடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புடின், "உலகின் முக்கிய அணுசக்தி நாடுகளும் ரஷ்யாவும், அமெரிக்காவும் சர்வதேச பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளும். 

இந்த சந்திப்பை வெற்றிகரமான ஒன்றாக நாங்கள் கருதுகிறோம். பேசும் அனைத்து விஷயத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்ற முற்படுவதால்  இருநாடுகளுக்கு இடையிலான பனிப்போர் என்பது கடந்த காலத்தில் மட்டுமே என்று கூறலாம். ட்ரம்புடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள தொடங்கியிருப்பதாக நம்புகிறோம். அதற்காக ட்ரம்ப்புக்கு நன்றி கூற வேண்டும். 

நாங்கள் சில சவால்களை எதிர்கொள்கிறோம். அவை அனைத்தையும் எங்களால் பேசித் தீர்க்க இயலாது. இருப்பினும் இது எங்களின் முதல் படியாக கருதுகிறோம். நான் ட்ரம்பை நம்புகிறேன் என்றும், அவர் என்னை நம்புகிறார் என்றும் எப்படி கூறலாம். அமெரிக்கா மீது டிரம்ப் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார்.  அதே போல தான், நான் ரஷ்யா மீது அக்கறை கொண்டுள்ளேன்" என்றார். 

தொடர்ந்து பேசிய ட்ரம்ப், சிரிய விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்று. ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதில் எங்கள் இரு நாடும் கைகோர்த்து செயல்படும். ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான வெற்றிகரமான போரில் ஈரான் நன்மைகள் பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. 

ரஷ்யா வெற்றிகரமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நிறைவு செய்துள்ளது" என்றார். 

அப்போது குறுக்கிட்ட புடின், "மிஸ்டர். பிரசிடெண்ட் இந்த கால்பந்தை உங்களுக்கு அளிக்கிறேன். 2026ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று கால்பந்தை அளித்து கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP