ரஷ்ய சர்க்கஸில் பயங்கரம்!- 4 வயது குழந்தையை கடித்துக் குதறிய சிங்கம் (அதிர்ச்சி வீடியோ)

ரஷ்ய சர்க்கஸில் பார்வையாளர்கள் பகுதியில் பாய்ந்த சிங்கம் அங்கிருந்த 4 வயது சிறுமியை கடித்துக் குதறியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விபரீதம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 | 

ரஷ்ய சர்க்கஸில் பயங்கரம்!- 4 வயது குழந்தையை கடித்துக் குதறிய சிங்கம் (அதிர்ச்சி வீடியோ)

ரஷ்ய சர்க்கஸில் பார்வையாளர்கள் பகுதியில் பாய்ந்த சிங்கம் அங்கிருந்த 4 வயது சிறுமியை கடித்துக் குதறியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

ரஷ்யத்  தலைநகர் மாஸ்கோவின் அருகே உள்ள கிராஸ்நோடார் மண்டலத்துக்கு உட்பட்ட உஸ்பென்ஸ்கோ கிராமத்தில் மாஸ்கோ பிக் சர்க்கஸ் என்ற நிறுவனம் நேற்று முன்தினம் இரவு சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.  அப்போது அங்கு பல வகையான சாகசங்கள் மிருகங்களைக் கொண்டு நடத்தப்பட்டது பார்வையாளர்களை கவர்வதாக அமைந்தது. அப்போது  திடீரென ஒரு சிங்கம் பயிற்சியாளருக்கு கீழ்ப்படியாமல் முரண்டு செய்தது. சிங்கத்தை கட்டுப்படுத்த பயிற்சியாளர் அதனை மிரட்தினார். ஆனால் சிங்கம் மேலும் உக்கிரத்தோடு கட்டுப்பாட்டை மீறி திடீரென பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதியில் பாய்ந்தது.

அப்போது கூண்டுக்கு வெளியே பார்வையாளர்கள் மத்தியில் நின்று கொண்டிருந்த 4வயது குழந்தையை அந்தச் சிங்கம் இழுத்துக் கொண்டது. செய்வது அறியாமல் அங்கிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.  பயிர்ச்சியாளரும் அங்கிருந்த பார்வையாளர்களும் சிங்கத்திடமிருந்து குழந்தையை படுகாயங்களுடன் மீட்டனர். 

மீட்கப்பட்ட குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தை ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்றபோதிலும் முகத்திலும், உடலிலும் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிங்கத்தின் கடியால் பட்ட காயங்களும், தழும்புகளும் மாறாத அளவுக்கு முகம் சிதைந்துவிட்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கிராஸ்நோடார் நகர போலீஸார் சர்க்கஸ் நிறுவனத்தின் நிர்வாகி எட்வார்ட் ஜபாஸ்னி, சிங்கத்தின் பயிற்சியாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தியது, பார்வையாளர்களுக்கும் விலங்குகள் இருக்கும் சாகச நிகழ்ச்சி மேடைக்கும் இடையே கடைப்பிடிக்கப்படும் இடைவெளியை பராமரிக்காமல் விதிமுறை செய்தது என கிரிமினல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ரஷ்யாவில் கடந்த 2016-ம் ஆண்டு சைபிரியாவில் சிறுத்தை ஒன்று கூண்டில் இருந்து அழைத்துவரும்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பெண்ணை தாக்கியது, 2012-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது, சிறுத்தைப்புலி ஒன்று 7வயது சிறுவனை தாக்கியது என அவ்வப்போது இது போன்ற விபரீதங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP