Logo

சவுதி மீது விசாரணை: பத்திரிகையாளர் படுகொலை விவகாரத்தில் பிரான்ஸ், ஜெர்மனி வலியுறுத்தல்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்காக எழுதி வந்த ஜமால் கஷோகி சவுதி துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன.
 | 

சவுதி மீது விசாரணை: பத்திரிகையாளர் படுகொலை விவகாரத்தில் பிரான்ஸ், ஜெர்மனி வலியுறுத்தல்

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்காக எழுதி வந்த  ஜமால் கஷோகி சவுதி துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளன. 

இது தொடர்பாக ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜலா மேர்கல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெயகோ மாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பத்திரிகையாளர் படுகொலை குறித்த ஒப்புதல் நீண்ட வலியுறுத்தலுக்கும் அழுத்தத்துக்கும் பின்னர் வெளியாகியுள்ளது திகைப்பை ஏற்படுத்துகிறது.   இது கடுமையான கண்டனத்துக்குரியது. சவுதி அரேபியா இந்த விவகாரத்தை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும். அவர் கொல்லப்பட்ட சூழல்கள் அனைத்து தெரிவிக்கப்பட வேண்டும். சவுதி அளித்திருக்கும் விவரங்களில் எந்த விளக்கமும் இல்லை'' என்று குறிப்பிட்டார். 

இதனிடையே சவுதிக்கு செல்ல இருந்த ஜெர்மனி அமைச்சர் ஹெயகோ மாஸின் பயணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  இது இருத் தரப்பு வர்த்தக உறவை தற்போதைய அளவில் பாதிக்காது என கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடாக ஜெர்மனி திகழ்கிறது. 

பிரான்ஸ் வெளியுரவுத்துறை அமைச்சர் ஜேன் யீவ்ஸ் ட்ரியானம் கூறுகையில்,  "பிரான்ஸ் இந்தப் படுகொலையை மிகவும் அழுத்தமாக கண்டிக்கின்றது. கஷோகி விவகாரத்தில் பதில் அளிக்கப்படாத கேள்விகள் நிறைய இருக்கின்றன. இதற்கு காரணமானவர்களிடம் இதற்கான நீண்ட விரிவான விசாரணை தேவைப்படுகிறது.'' என்றார். 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டுக்காக எழுதி வந்தார். அதில் அவர் சவுதி அரசின் தன்னாட்சிக் குறித்தும் மனனர் குடும்பத்துக்கு எதிராகவும் விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், அவர் தனது துருக்கி நாட்டுத் தோழியை திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்காக, சில ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி கஷோகி சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் மாயமானார். இந்த சம்பவத்துக்கு அமெரிக்க, துருக்கி, ஜெர்மனி என சர்வதேச நாடுகள் அழுத்தம் தந்து வந்தன.  துருக்கி நடத்திய விசாரணையின் மூலம் கஷோகி சித்திரவதை செய்யப்பட்டு தலைதுண்டித்து கொல்லப்பட்டதாக தமது விசாரணைத் தகவலை வெளியிட்டது. 

இருப்பினும் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு மறுப்புத் தெரிவித்து சமாளித்து வந்த சவுதி மன்னர் அரசு இறுதியாக நேற்று (சனிக்கிழமை) இதனை ஒப்புக்கொண்டது. அதுவும் மேலோட்டமாக, ஜமால் கஷோகி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் கொல்லப்பட்டது உண்மைதான் எனவும் தூதரகத்திற்குள் நடந்த சண்டையில் இந்த கொலை அரங்கேறியதாகவும் தெரிவித்தது.

இந்த கொலையில் தொடர்புடைய 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் உயர் புலனனாய்வு அதிகாரிகள் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உதவியாளர்களான அகமது அல்-அஸ்ஸீரியையும் அரசாங்கத்தின் ஊடக ஆலோசகர் சவுத் அல்-கட்டானி ஆகியோரை சவுதி அரேபியா பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP