மழை நீருக்கு வரி விதித்த ரஷ்ய நகரம்

ரஷ்யா நகரம் ஒன்றில் மழை நீருக்கு வரி விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 | 

மழை நீருக்கு வரி விதித்த ரஷ்ய நகரம்

ரஷ்யா நகரம் ஒன்றில் மழை நீருக்கு வரி விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

ரஷ்யாவில் உள்ள பேர்ம் எனும் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்று மாதாந்திர பயன்பாட்டு கட்டணம் மொத்தமாக வசூலிக்கும் முறை அமலில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் மழை வரி என்ற பெயரில் புதிய கட்டணம் ஒன்று மாதாந்திர கட்டணத்தில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கண்ட குடியிருப்புவாசிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேள்வி எழுப்பிய போது இது மழைக்காலம் என்பதால் மொட்டை மாடியிலிருந்து வழிந்தோடி கழிவுநீர் தொட்டியில் மழைநீர் கலந்ததால் அதற்குரிய கட்டணம் மழை வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீர் பைப்புகள் மூலம் வடிகால் வழியாக செல்கிறது. ஆனால் மொட்டை மாடியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் தனியாக பைப்புகள் மூலமாக பூமிக்குள் செலுத்தப்படுகிறது. எனவே வரி விதிப்பு சரி அல்ல என குடியிருப்பு வாசிகள் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு இது முற்றிலும் சட்டப்பூர்வமாகவே வசூலிக்கப்படுகிறது என்றும் கழிவுநீர் வடிகாலில் செல்லும் கழிவுநீர் மற்றும் மழை நீர் ஆகியவை இரண்டுமே சமமாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது இதனை ஏற்றுக்கொண்ட குடியிருப்புவாசிகள் இது மழைக்காலத்திற்கு மட்டும் வசூலிக்கப்படுமா அல்லது வருடம் முழுவதும் வசூல் செய்யப்படுமா என்று மேலும் குழப்பமடைந்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP