3 குழந்தை பெற்றால் இலவச நிலம்!- பிறப்பை ஊக்குவிக்கும் இத்தாலி அரசு 

குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு உள்ள இத்தாலி அரசு 3வது குழந்தை பெறும் பெற்றோருக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கிட்ட உத்தேசித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 | 

3 குழந்தை பெற்றால் இலவச நிலம்!- பிறப்பை ஊக்குவிக்கும் இத்தாலி அரசு 

குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு உள்ள இத்தாலி அரசு 3வது குழந்தை பெறும் பெற்றோருக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் பிறப்பு விகிதம் குறைபாக உள்ளது. எனவே அதனை உயர்த்த அந்நாட்டு அரசுகள் பல்வேறு திட்டங்களை இயற்றுகின்றன. இந்த நிலையில் 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று இத்தாலி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்றுக் கூறப்படுகிறது. 

அதன்படி, சில கால அளவுக்கு அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும். இத்தாலியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளன. இவற்றை 3-வது குழந்தை பெற்றவர்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே அங்கு பிறந்துள்ளன. இதனால் அங்கு இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

ஆண்-பெண்கள் ஒன்று சேர்ந்து குடும்பமாக வாழ்கிறார்கள், சிலர் குடும்பச் சூழலை தவிர்த்து வாழ்கின்றனர். அதனால் திருமணம் செய்து கொள்வது இல்லை. எனவே குழந்தை பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.

அதே போல, தம்பதியினர் பலர் குழந்தையின்மை பிரச்னையால் அவதிப்படுகின்றனர். வாய்ப்பு இருக்கும் தம்பதிகளும் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டுவதில்லை. இதுபோலான எண்ணங்களை மாற்ற ஐரோப்பிய நாடுகளில் பிறப்பை ஊக்குவிக்க சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP