பிரிட்டன் ரசாயன தாக்குதல்: விரைவில் குணமடைவேன் என்கிறார் உளவாளியின் மகள்

சமீபத்தில் பிரிட்டனில் வைத்து ரசாயன தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட முன்னாள் ரஷ்ய உளவாளியின் மகள், தற்போது குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 | 

பிரிட்டன் ரசாயன தாக்குதல்: விரைவில் குணமடைவேன் என்கிறார் உளவாளியின் மகள்

பிரிட்டன் ரசாயன தாக்குதல்: விரைவில் குணமடைவேன் என்கிறார் உளவாளியின் மகள்சமீபத்தில் பிரிட்டனில் வைத்து ரசாயன தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட முன்னாள் ரஷ்ய உளவாளியின் மகள், தற்போது குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 4ம் தேதி, முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கேய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் லூலியா, லண்டனில் உள்ள ஒரு பார்க் பெஞ்சில் மயங்கிய படி கிடந்தனர். அவர்கள் ரசாயன விஷ தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது பின்னர் தெரிய வந்தது. ரஷ்ய உளவுத்துறை இதுபோன்ற ரசாயன விஷ தாக்குதல்களில் ஈடுபடுவதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளதால், ரஷ்யாவின் செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. 

அதன்பின் நடந்த விசாரணையில், இந்த சம்பவத்துக்கு ரஷ்யா தான் காரணம் என பிரிட்டன் அரசு உறுதி செய்து, குற்றம் சாட்டியது. பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி நடவடிக்கை எடுக்க, ரஷ்யாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட, ஸ்க்ரிப்பாலின் மகள் லூலியா, வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். தான் விரைவில் வீடு திரும்புவேன் என்றும், தனது தந்தையும் தேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP