கம்யூனிசம் கலந்த இஸ்லாம் - சீனா புதிய சட்டம்

கம்யூனிசம் கலந்த இஸ்லாமிய நடைமுறையைக் சட்டமாக்க சீன அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக இஸ்லாமிய தலைவர்களுடன் சேர்ந்த புதிய நடைமுறைகளை வகுத்துள்ளது அந்நாட்டு அரசு.
 | 

கம்யூனிசம் கலந்த இஸ்லாம் - சீனா புதிய சட்டம்

கம்யூனிசம் கலந்த இஸ்லாமிய நடைமுறையைக் சட்டமாக்க சீன அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக இஸ்லாமிய தலைவர்களுடன் சேர்ந்து புதிய நடைமுறைகளை வகுத்துள்ளது அந்நாட்டு அரசு.

சமீபகாலமாக சீனாவில் பல்வேறு மதம் சார்ந்த சுதந்திரங்கள் குறைக்கப்பட்டு, சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் அதிகம் வாழும் உய்குர் இஸ்லாமியர்கள், சித்ரவதை செய்யப்படுவதாகவும், சுமார் 10 லட்சம் பேர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், பல்வேறு இஸ்லாமிய அமைப்பு தலைவர்களை சீன அரசு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் கம்யூனிசம் கலந்த இஸ்லாமிய மதத்தை நடைமுறைக்கு கொண்டு வர புதிய விதிகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. இதை அந்நாட்டின் அரசு விரைவில் சட்டமாக்க உள்ளது. ஏற்கனவே பல்வேறு மதங்களுக்கு உள்ள சுதந்திரங்களை சீன அரசு பறித்து விட்டதாக, அதிபர் ஜி ஜின்பிங் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. முக்கியமாக, இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் கடுமையான விதிகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சீனாவின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் தாடி வளர்ப்பது, புர்கா அணிவது, வழிபாடு செய்வது, நோன்பு இருப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP