இந்திய விமானப்படை தாக்குதல்- சீனா கருத்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின் மீது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
 | 

இந்திய விமானப்படை தாக்குதல்- சீனா கருத்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின. 

இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது தாக்குதல் சம்பவம் குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் பேசுகையில், நாங்கள் இந்த பிரச்சனையை கவனித்து வருகிறோம். தெற்கு ஆசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிக முக்கியமான நாடுகள். இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்பும், புரிந்துணர்வும்தான் ஆசியாவில் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சனை ஏற்படும். இரண்டு நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை சேர்ந்து எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP