சீனா: தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விபத்து; 10 தொழிலாளர்கள் பலி

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் பிரபல தொழிற்சாலை ஒன்றில் சீரமைப்புப்பணிகள் நடைபெற்றன. இதற்காக கட்டிடத்தின் ஒருபகுதி புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை திடிரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். 

உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தீவிர மீட்புப்பணியில் இறங்கியுள்ளனர். இதுவரை 10 பேரின் உடல் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP