நுரையீரலில் சிக்கிய ஆபரணம்; 5 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்..!

நுரையீரலில் சிக்கிய ஆபரணம்;  5 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்..!
X

அமெரிக்காவில், 5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவர் மூக்கில் அணிந்­தி­ருந்த ஆப­ரணம், அவருடைய நுரையீரல் பகுதிக்குள் இருந்து அகற்றப்பட்டது.

அமெரிக்காவின் சின்­சி­னாட்டி நகரைச் சேர்ந்தவர் ஜோய் லைகின்ஸ்(35). இவர், தனது காது, புருவம், உள்ளிட்ட 12 இடங்களில் துளை­கள் இட்டு பல ஆப­ர­ணங்­கள் அணிந்­தி­ருந்தார். அந்த வகையில், மூக்கின் இரண்டு துவா­ரங்­க­ளுக்கு நடுவில் வளை­யம் ஒன்றை அணிந்­தி­ருந்தார்.


5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள், இரவில் உறங்கிய அவர் காலையில் கண்விழித்­து எழுந்த போது, மூக்கில் அணிந்­தி­ருந்த வளையம் காணாமல் போயி­ருந்­தது. இதையடுத்து, மெத்தை விரிப்பு, கட்டில் என எல்லா இடங்­க­ளிலும் அந்த வளை­யத்தை தேடியுள்ளார். அது கிடைக்காமல் போகவே அப்படியே விட்டுவிட்டார்.

இந்நிலையில், சில வாரங்­க­ளுக்கு முன்னர் அவருக்கு கடு­மை­யான இருமல் மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. அத்துடன், சுவா­சப்­பா­தையில் ஏதோ அடைப்பது போன்று உணர்ந்துள்ளார். இதனால், நிமோ­னியா அல்­லது அது போன்ற ஏதா­வது தொற்று ஏற்­பட்­டி­ருக்­கலாம் என அச்சம் அடைந்தார்.


இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற அவரை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தபோது, அவருடைய மூக்கு வளையம் நுரை­யீ­ரலில் சிக்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­தது. இதைத் தொடர்ந்து, ப்ரோன்கோஸ்கோபி சிகிச்சை மூலம் அந்த வளையத்தை நுரையீரலில் இருந்து மருத்துவர்கள் அகற்றினர்.

Next Story
Share it