ஏன் சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு நிகழ்த்தப்படுகிறது:  காரணங்கள் உள்ளே 

பெண்களின் உடலமைப்பு குழந்தையை பிரசவிப்பதற்கு ஏதுவான அமைப்பை கொண்டிருக்கும். ஆனால் சில பெண்களின் உடல் வளர்ச்சியில் இருக்கும் சில சிக்கல்களால் குழந்தை இயற்கையான முறையில் வெளிவருவதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த சமயங்களில் சுகப்பிரசவத்திற்காக காத்திருப்பது தாய் - சேய் என இருவருக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

ஏன் சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு நிகழ்த்தப்படுகிறது:  காரணங்கள் உள்ளே 
X

பொதுவாக தாய்மை அடைந்த அனைத்து பாலூட்டி வகைகளுக்கும் இயற்கையான முறையிலேயே பிரசவம் நிகழ்கிறது. ஆனால், எதற்காக இந்த மனித இனத்தில் மட்டும் இயற்கைக்கு மாறான சிசேரியன் முறை என கேட்பவர்கள் பலருண்டு. உண்மையில் தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து நிகழும் என்கிற காரணிகளால் மட்டுமே சிசேரியனை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

பெண்களின் உடலமைப்பு குழந்தையை பிரசவிப்பதற்கு ஏதுவான அமைப்பை கொண்டிருக்கும். ஆனால் சில பெண்களின் உடல் வளர்ச்சியில் இருக்கும் சில சிக்கல்களால் குழந்தை இயற்கையான முறையில் வெளிவருவதில் சிரமம் ஏற்படுகிறது. அந்த சமயங்களில் சுகப்பிரசவத்திற்காக காத்திருப்பது தாய் - சேய் என இருவருக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

பொதுவாக கர்ப்பப்பையின் வாய் திறப்பதன் மூலம் குழந்தை வெளி வருவதை சுகப்பிரசவம் என கூறுவோம். இந்த சுகப்பிரசவத்திற்கு ஏற்ற சூழல் அமையாத போது தாயின் வயிறு மற்றும் கர்ப்பபையை கிழித்து குழந்தை எடுக்கப்படும் முறையே சிசேரியனாகும்.

ஏன் சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு நிகழ்த்தப்படுகிறது:  காரணங்கள் உள்ளே

எந்தெந்த காரணங்களால் சிசேரியன் செய்யவேண்டிய கட்டாயம் உருவாகிறது என்பதை பார்க்கலாம் ..

கர்ப்பப்பையின் அடிப்பாகத்தில் நஞ்சு அமைந்திருந்தால் பிரசவத்தின்போது அதிக உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சிசேரியன் செய்யப்படுகிறது.

குழந்தை வெளிவரும் பாதையான கர்ப்பிணியின் கூபக எலும்புக்கட்டு முறையாக வளர்ச்சியடையாமல் குறுகலாக இருக்கும் பட்சத்தில் சிசேரியன் முறை பயன்படுத்த படுகிறது.

குழந்தை பிறப்பின் போது தலைக்கு பதில் கால் முதலில் வெளியில் வருவதால் குழந்தையில் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் இதன் காரணமாக சிசேரியன் செய்யப்படுகிறது.
குழந்தை வெளியில் வருவதற்கு ஏற்றார் போல கீழ்நோக்கி திரும்பாத பட்சத்தில் இயற்கை பிரசவம் சாத்தியப்படாது.

தாய்க்கு ரத்த அழுத்தம், உடலில் வீக்கம் இருந்தால் பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும் அதன் காரணமாக சிசேரியன் பரிந்துரைக்கப் படுகிறது.

அடிக்கடி கருச்சிதைவு, முந்தைய பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்திருத்தல் போன்றவை சந்தித்த தாய்மார்களுக்கு சே சிசேரியன் செய்யப்படுகிறது.

ஏன் சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு நிகழ்த்தப்படுகிறது:  காரணங்கள் உள்ளே

நீரிழிவு, இருதயநோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்யப்படுகிறது.

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் சுவாச பிரச்னையின் காரணமாக உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தை வெளியில் எடுக்கப்படும்.

தாய் தீவிர நஞ்சு பாதிப்பிற்கு ஆளாகி இருந்தால் சிசேரியன் உடனடியாக செய்யப்படுகிறது.

கர்ப்பப்பை வாயில் புற்று நோய், அல்லது கர்ப்பப்பை அருகில் கட்டி இருந்தால் சிசேரியன் செய்யப்படுகிறது.

சிசேரியன் மூலம் முதல் குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தை பிறந்த மூன்று வருடத்திற்கு முன்பாக மீண்டும் கர்ப்பம் தரிக்கும் சமயத்தில் சிசேரியன் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் முந்தைய பிரசவத்தின் போது கருப்பையில் போடப்படும் கீறல் மறுமுறை சுகப்பிரசவத்தின் போது பிரிந்து விடும் அபாயம் உள்ளது.

இது போன்று தாயின் உடலில் ஏற்படும் முறையற்ற வளர்ச்சி, தாய் நாள்பட்ட நோய் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பது. குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சிசேரியன் செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

Next Story
Share it