உஷார்! தலையணைக்கு அடியில் மொபைல் வைத்துக் கொள்பவர்களே!

உஷார்! தலையணைக்கு அடியில் மொபைல் வைத்துக் கொள்பவர்களே!

உஷார்! தலையணைக்கு அடியில் மொபைல் வைத்துக் கொள்பவர்களே!
X

ப்போதைய நடைமுறையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மொபைல் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை என்றாகி விட்டது.

தொடர்ந்து மொபைல் உபயோகப்படுத்துவதால் உருவாகும் ஆரோக்கிய கோளாறுகளை ஏற்கனவே படித்திருப்போம். நம்மில் பலரும் காலை எழுந்தவுடன் முதலில் எடுப்பது செல்போனைத்தான்.இதனால் கைக்கு எட்டும் தூரத்திலேயே பெரும்பாலும் படுக்கைக்கு அருகில் அல்லது தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மொபைல் நெட்வொர்க் ஆன் மோடில் உள்ள போது அதனால் கதிரியக்கங்கள் உருவாகும். பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்பகங்களிலும் வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவையும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயையும் ஏற்படுத்தலாம் என ஆய்வுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.இந்த தலைமுறை குழந்தைகளில் பலருக்கு சாப்பாடே மொபைலில் வீடியோ பார்த்தால் வாயில் இறங்கும். இதனை பெற்றோர்கள் பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால் குழந்தைகளின் மண்டை ஓடு மிகவும் மெலிதானதாக இருக்கும், அவர்கள் மூளையின் செயல்திறனும் இப்பொழுதுதான் அதிகரிக்க தொடங்கியிருக்கும்.

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மன வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைத்துக் கொள்ளலாம்.அடிக்கடி தலைவலி, கண் எரிச்சல் இருப்பவர்கள் சிறிது நேரம் செல்போனை உடலை விட்டு தள்ளி வைத்து உபயோகப்படுத்தினாலே மிகப்பெரிய மாற்றத்தை உணரலாம். இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைப்பதால் கதிரியக்கம் காரணமாக மூளையில் கட்டி ஏற்படலாம். தூங்கும் நேரம் குறைந்தது 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும்.

நாம் தூங்க உதவி புரியும் ஹார்மோன்களை செல்போனின் கதிரியக்கங்கள் தடை செய்கின்றன. அதனாலேயே மொபைல் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இரவில் சரியான தூக்கம் வருவதில்லை. நிம்மதியான தூக்கத்திற்கு முதலில் மொபைலை அப்புறப்படுத்தினாலே போதும்.

Next Story
Share it