1. Home
  2. ஆரோக்கியம்

சீக்கிரமே ஆற்றல் தரும் சீரகத்தண்ணீர்..

சீக்கிரமே ஆற்றல் தரும் சீரகத்தண்ணீர்..

தாகமெடுக்கும்போதெல்லாம் தண்ணீர் குடிக்கிறோம்.என்ன தண்ணீர் குடிக்கிறோம்.ஒன்று கேன் வாட்டர் இல்லையென்றால் ஆர்.ஓ. வாட்டர் அல்லது கார்ப்பரேஷன் வாட்டர். குடிக்கும் நீரில் சத்து இருக்கிறதோ இல்லையோ அதையும் சத்தாக்கி நம்மால் குடிக்கமுடியும் என்பது தெரியு மா? என்னவென்று கேட்கிறீர்களா அதுதான் சீரகத்தண்ணீர்.

சீர்+ அகம்= சீரகம், அகத்தை சீர் செய்யும் பொருள் இது என்பது குறிப்பிடத் தக்கது. முன்னோர்கள் தங்கள் சமையலறையில் வைத்திருக்கும் அஞ் சறைப் பெட்டியில் இருக்கும் உணவு பொருள்கள் சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்யத்துக்காகவும் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்றுதான் சீரகம்.

சீரகத்தை உணவில்சேர்ப்பது போலவே சீரகத்தை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு அதிக நன்மை தரும். தினமும் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். சீரகம் தரும் நன்மைகள் குறித்து பட்டியலே போடலாம். என்ன வென்று பார்க்கலாமா?

உடலில் நோய் எதிர்ப்புசக்திகளை அதிகரிக்கும் வல்லமை வாய்ந்தது சீரகம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சீரகத்தண்ணீர்.

உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருப்பவர்கள் சீரகத் தண்ணீரைக் குடித்தால் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தி ருக்கும். இந்த பொட்டாசியம் கல்லீரலுக்கும், பித்தபைக்கும் பலம் சேர்க்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சீரகம் பெரிதும் துணை புரிகிறது.

உடலுக்கு தேவையான இரும்புச்சத்து சீரகத்திலும் உண்டு. அன்றாடம் சீரக நீரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து நிறைவாக கிடைக்கிறது. ஹீமோகுளோபின் குறைபாட்டால் இரத்த சோகை, சுவாசக்குழாயில் பிரச்னை, சளி, இருமல் போன்ற பிரச்னை கள் அவ்வப்போது படுத்தினால் தொடர்ந்து சீரக நீரை எடுத்துவந்தால் விரைவில் குணமடைவதைக் கண்கூடாக பார்க்கலாம்.


பெண்கள் மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அண்டாமல் இருக்க சீரக நீர் பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றல், வாந்தி போன்ற உணர்வு வந் தால் கால் டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு உமிழ்நீரோடு கலந்து நன்றாக மென்று சாப்பிடலாம்.

வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் மோரில் இஞ்சி, உப்பு சேர்த்து சீரகத்தை தாளித்து சேர்த்தால் வாயுத்தொல்லை நீங்கும். பித்தத்துக்கும் சீரகம் நல்லது. இஞ்சி, எலுமிச்சை இரண்டையும் சாறாக்கி சீரகத்தை ஊறவைத்து காலை மாலை சாப்பிட்டால் பித்தம் ஒழியும்.

நரம்பு பலவீனமாக இருப்பவர்கள் சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நரம்புகள் வலிமையடையும். வயிறு பொருமலுக்கு சீரகத்துடன் கறுப்பு வெற்றிலை நான்கு மிளகு சேர்த்து நன்றாக மென்று சாறை விழுங்கினால் நீங்கும்.

குழந்தைகளுக்கு சீரக நீர் கொடுத்துவந்தால் மந்த நிலை போவதோடு சுறு சுறுப்பாக வளையவருவார்கள். நினைவாற்றலும் அதிகரிக்கும். குழந் தைகளுக்கு கண்களில் எரிச்சல், கண்களில் அதிகமாக நீர் வடிந்தால் நல்லெண்ணையைச் சூடாக்கி நான்கு மிளகு, சீரகம் சேர்த்து தலைக்கு தேய்த்து குளிக்கவைத்தால் கண் உஷ்ணம், நீர் வடிதல் நிற்கும்.

உடல் உள்ளுறுப்புக்கும் சரும அழகுக்கும் கூட துணை நிற்கிறது சீரகத்தின் செயல்பாடு. சருமம் வறண்டிருப்பவர்கள் சீரக நீரில் அவ்வப்போது முகத்தைக் கழுவினால் சருமம் மிருதுவாகும். விரைவில் முதுமை அடையாமல் என்றும் இளமையோடு காக்க சீரகம் உதவிபுரிகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ இளமையைப் பாதுகாக்கிறது. கூந்தல் உதிர்விலிருந்தும், இளநரை வருவதையும் தடுக்கிறது.

ஒரு பொருள் பல பயன்கள் தராததைச் சீரகம் தருகிறது. இனி சீரகத்தைக் கையில் வைத்திருங்கள் அக அழகும், புற அழகும் ஆரோக்யமாகும்.

newstm.in


newstm.in

Trending News

Latest News

You May Like