அசுத்தமான நீரை சுத்தப்படுத்தும் முருங்கை விதை: அமெரிக்க ஆய்வு வழி காட்டுகிறது

இந்தியாவை தாயகமாக கொண்ட முருங்கை மரம், அசுத்தமான தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 | 

அசுத்தமான நீரை சுத்தப்படுத்தும் முருங்கை விதை: அமெரிக்க ஆய்வு வழி காட்டுகிறது

இந்தியாவை தாயகமாக கொண்ட முருங்கை மரம், அசுத்தமான நீரைத் தூய்மைப்படுத்த உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வெப்ப மண்டல நிலப் பகுதியில் வளரக் கூடிய முருங்கைக்கு இந்தியாதான் தாயகம். நம் ஊரில் வீட்டுக்கு வீடு (ஃபிளாட்ஸ் அல்ல...) பார்க்க முடியும். முருங்கையின் வேர் முதல் விதை வரை தண்டு முதல் பிசின் வரை அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது என நமக்குத தெரியும். 

ஆனால் முருங்கையைக் கொண்டு, அசுத்தமான தண்ணீரையும் சுத்தம் செய்ய முடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள கார்னேஜி மெல்லோன் பலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிலர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் மரம், செடி, கொடிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்பதை கண்டறிந்துள்ளனர். இது மிகவும் குறைந்த செலவில் நீரைத் தூய்மைப்படுத்தும் ஆரோக்கியமான முறை என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கார்னேஜி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முருங்கை மரத்தை தண்ணீரைத் தூய்மையாக்க பயன்படுத்த முடிவு செய்தனர். அதன்படி எஃப்-சான்ட் என்ற பொருளை உருவாக்கியுள்ளனர். ஒரு தொட்டியில் மணலைப் பரப்பி அதன் மேல் சிலிக்கான் துகள்களைக் கொட்டி பின்னர் முருங்கை கீரை, விதையிலிருந்து எடுக்கப்பட்ட புரதச் சத்துகளை பரவலாக வைப்பதே எஃப்-சான்ட் என்பதாகும். இந்த எஃப் சான்ட் என்பது மிகவும் குறைந்த செலவில் நீரைத் தூய்மையாக்க உதவுகிறது. நீர் சுத்திகரிப்பானாக முருங்கை பயன்படுத்தப்படுகிறது.

மேலும் எப்-சான்ட் மூலம் தண்ணீரைச் செலுத்தும்போது அதிலிருக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன. தேவையில்லாத பொருட்கள் வடிகட்டப்படுகின்றன. நீரிலிருந்து அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன. இதன்மூலம் தண்ணீர் நீண்ட நாட்களுக்கு சுத்தமாக இருக்கும். ஐ. நா. சபை கணக்கீட்டின்பது உலகில் 210 கோடி மக்கள் பாதுகாப்பான குடிநீர் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP