யம்மி மேங்கோ மில்க் ஷேக்…

பழங்கள் உடலுக்கு எப்போதுமே ஆற்றலையும் சக்தியையும் கொடுப்பவை. சக்தி கொடுக்கக் கூடிய பழங்கள் இதுதான் என்று தனியாக எந்தப் பழத்தையும் வகைப்படுத்தி பார்க்க முடியாது. எல்லா பழங்களுமே உடலுக்கு குறிப்பிட்ட ஏதாவது ஒரு சக்தியைத் தருகின்றது. 100% உணவில் 40% உணவு வகைகள், 30% காய்கறிகள், 30% பழங்கள் என்று திட்டமிட்டு எடுத்துக்கொண்டால் உடலை ஆரோக்யமாக அழகாக வைத்துக்கொள்ளலாம்.
 | 

யம்மி மேங்கோ மில்க் ஷேக்…

எப்போதும் ஆரோக்யம் குறித்த செய்திகளைத் தான் பகிர்கிறோம். அவ்வப் போது ரெஸிபிகளையும் அதிலும் ஆரோக்யம் தருபவற்றை பார்க்கலாமே...  

பழங்கள் உடலுக்கு எப்போதுமே ஆற்றலையும் சக்தியையும் கொடுப்பவை.  சக்தி கொடுக்கக் கூடிய பழங்கள் இதுதான் என்று தனியாக எந்தப் பழத்தையும் வகைப்படுத்தி பார்க்க முடியாது. எல்லா பழங்களுமே உடலுக்கு குறிப்பிட்ட ஏதாவது ஒரு சக்தியைத் தருகின்றது. 100% உணவில் 40% உணவு வகைகள், 30% காய்கறிகள், 30% பழங்கள் என்று திட்டமிட்டு எடுத்துக்கொண்டால் உடலை ஆரோக்யமாக அழகாக வைத்துக்கொள்ளலாம்.

எல்லா பழங்களும் எல்லா சீஸன்களிலும் கிடைக்காது. அதனால் சீஸனில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட பழக வேண்டும். கோடையில் உண்டாகும் நீர்வறட்சியைத் தணிக்க இயற்கை கொடுத்த கொடை  தர்பூசணி, நுங்கு, முலாம் பழம், வெள்ளரிப்பழம், மாம்பழம் போன்றவை. எல்லா குழந்தைகளும் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள் என்று சொல்லமுடியாது. அவர்களுக்கு பழச்சாறாகவோ, பால்கலந்து ஷேக் போலவோ செய்து கொடுத்தால் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். அதிலும் மேங்கோ மில்க் ஷேக் செய்து கொடுத்தால் அதன் ருசியை அடுத்த மேங்கோ சீஸன் வரை மறக்க மாட்டார்கள். 

யம்மி மேங்கோ மில்க் ஷேக் செய்ய தேவையானவை

* நன்றாக பழுத்த மாம்பழம் - 2 (சுவை மிக்கதாக புளிப்பில்லாமல் இருக்க வேண்டும்)

* சுட்டீஸ்க்கு பிடித்த ஃப்ளேவர்  (வெனிலா, ஸ்ட்ராபெர்ரி) ஐஸ்க்ரீம் -  200 மிலி

* நன்றாக காய்ச்சிய பால் -1 தம்ளர்

* சர்க்கரை - இனிப்புகேற்ப.

செய்முறை:

மாம்பழத்தைத் தோல் சீவி  நறுக்கி மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து கூழாக்கவும். பிறகு ஐஸ்க்ரீம், பால் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி கண்ணாடி தம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம். மிக மிக சுவையான மேங்கோ மில்க் ஷேக் சுவை நாவிலேயே ஒட்டிக்கொள்ளும். குழந்தைகள் விரும்பிக் குடிப்பார்கள். நீரிழிவு இருப்பவர்கள் எப்போதாவது நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும் போது எடுத்துக்கொள்ளலாம். ஐஸ்க்ரீம் ஆகாது என்பவர்கள் புளிப்பில்லாத கெட்டியான தயிரை பயன்படுத்தலாம். சுவையில் பெரிய மாற்றம் இருக்காது. கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் குறைந்த பட்ஜெட்டில் சுகாதாரமாய் வீட்டிலேயே தயாரிக்கும் மேங்கோ ஷேக் குழந்தைகளின் ஆரோக்யத்தை நிச்சயம் பாதிக்காது என்னும் போது வேறென்ன தேவை?


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP