கர்ப்பப் பை நீர்க்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன? காரணம் உள்ளே...

சினை முட்டைகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் நீர் நிறைந்த கட்டிகளாக நின்று விடுகின்றன. இதனால் முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் என்னும் மாதவிடாய் சுழற்சி முறையாக நடப்பதில்லை.
 | 

கர்ப்பப் பை நீர்க்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?  காரணம் உள்ளே...

கர்ப்பப் பை திசுக்களால் உருவாகும் சிறு சிறு நீர் நிறைந்த கட்டிகள் தான் ,கர்ப்பப் பை நீர் கட்டிகள் எனப்படும். இந்த கர்ப்பப் பை நீர் கட்டிகள்  இருப்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்திருந்தோம். இப்பொழுது, இந்த கட்டிகள் வராமல் தடுக்கும் முறைகளையும், வந்தால் கட்டிகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதையும் அடுத்தடுத்து பார்க்கலாம்.

நீர் கட்டிகள் என்றால் என்ன?

கர்ப்பப் பை நீர்க்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?  காரணம் உள்ளே...

சினை முட்டைகள் முழுமையாக வளர்ச்சியடையாமல், நீர் நிறைந்த கட்டிகளாக நின்று விடுகின்றன. இதனால், முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் என்னும் கருதரிப்பிற்கான ஹார்மோன்கள், முறையாக சுரக்காது. இதன் காரணமாக, விரைவிலேயே  மாதவிடாய் சுழற்சி நின்று விடுவதுடன்,  பெண்களுக்கு, ஆண் ஹார்மோன்களையும்  உற்பத்தி செய்து விடும்.  இது குழந்தை பெறுவதற்கான தடையாக மாறிவிடலாம், அதோடு இறந்த திசுக்கள் வெளியேறாமல் இருப்பதால், மிக அபாய விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம்.
 

கர்ப்பப் பை நீர் கட்டிகள் உருவாக காரணம் என்ன?

கர்ப்பப் பை நீர்க்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன?  காரணம் உள்ளே...


பொதுவாகவே ஆரோக்கிமான உணவுகள்,போதுமான உடலுழைப்பு இருந்தாலே கருப்பை சார்ந்த எந்த பிரச்னைகளும் நம்மை அண்டாது. அதோடு சத்துள்ள பழங்கள், கீரைகள், நட்ஸ் வகைகள், எரி சக்தி குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்டிப்பாக பாஸ்ட் புட், ஜங் புட் , கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை  சாப்பிட கூடது.

ஒவ்வொரு முறையும் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என பதிவிட்டு வருகிறோம். காரணம் பெரும்பாலான உடல் உபாதைகள் கலோரி அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு அதனால் உடல் பருமன் அடைவதாலேயே ஏற்படுகிறது.  

நல்ல உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அந்த உணவில் உள்ள கலோரிகளை எரிக்க  தேவையான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிக்கென தனியாக நேரம் ஒதுக்க முடியாத பெண்கள், தங்களது அன்றாட செயல்பாடுகளையே உடற்பயிற்சியாக மாற்றி கொள்ள முடியும்.

அதாவது, வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டில் உள்ள வேலைகளை தாங்களே செய்வது. பெரும்பாலும் மின் சாதன பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது, இதனால் மின் சார செலவு மட்டுமல்ல மருத்துவ செலவும் குறையும்.

அதேபோல வேலைக்கு செல்லும் பெண்கள் முடிந்த வரை நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதோடு வேலைக்கு செல்கிறேன் என்று காரணம் கூறி சில பெண்கள் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிற்கு வந்தால், ஓய்வு எடுப்பதை மட்டுமே வேலையாக வைத்திருப்பார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இத்தனையும் மீறி கர்ப்பப்  பையில் நீர்க்கட்டி வந்து விட்டால், அதனை கரைக்க என்ன செய்யலாம் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..

கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP