Logo

 குழந்தையின்மையை அதிகரிக்கும் டைட் ஜீன்ஸ்,லெக்கிங்ஸ்

பெண்கள் டைட்டாக உடை அணிவதால் வியர்வை வெளியேறாமல் 'வெர்டினல்' தொற்று ஏற்படும் ஆபத்துகள் அதிகம் உள்ளது. மேலும் ஆண்கள் டைட் ஃபிட் ஆடை அணிவதால் விரைப்பையில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது இதனால் குழந்தையின்மை பிரச்னையை சந்திக்க நேரிடும்.
 | 

 குழந்தையின்மையை அதிகரிக்கும் டைட் ஜீன்ஸ்,லெக்கிங்ஸ்

நாகரிக தோற்றத்தில் முக்கியமான ஒன்று தான் டைட் ஜீன்ஸ், லெக்கிங்ஸ், டைட் டாப், ஹைஹீல்ஸ், கேண்ட்பேக் போன்றவை.
இன்றைய கால‌கட்டத்தில்  பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் டைட்ஃபிட்டை தான் விரும்புகின்றனர்.. உடலை டைட்டாக அதிக நேரம் பிடித்திருக்கும் ஆடைகளால் நமது உடல் சந்திக்க இருக்கும் பிரச்னைகள் பதர வைக்கிறது..

பெண்கள் டைட்டாக உடை அணிவதால் வியர்வை வெளியேறாமல் 'வெர்டினல்' தொற்று ஏற்ப‌டும் ஆபத்துக்கள் அதிகம். மேலும் அத்தொற்று கருக்குழாய், கர்ப்பப்பை உள்ளிட்ட உறுப்புகளுக்கும் பரவி  குழந்தையின்மை  பிரச்னை ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடும்.

ஆண்கள் டைட் ஃபிட் ஆடை அணிவதால் விரைப்பையில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.  இதனால் உஷ்ணம் அதிகரித்து உயிரணு உற்பத்தி குறைந்து 'மலட்டு தன்மை' நோய்க்கு ஆளாக வேண்டியிருக்கும்.  மேலும் சிறுவர்களுக்கு டைட் ட்ரஸ் அணிவதால், வருங்காலத்தில் அவர்கள் ஆண்மை குறைவை சந்திக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 குழந்தையின்மையை அதிகரிக்கும் டைட் ஜீன்ஸ்,லெக்கிங்ஸ்

டைட் ட்ரஸ், ஹைஹீஸ் அணிவதால் விரல் வீக்கம் ஏற்பட்டு, விரல் அமைப்பில் மாற்றம் ஏற்படுவதுடன், குடல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

டைட்டான ஆடை முதுகு தண்டுவட பாதிப்பை அதிகரிக்கும்.. முதுகு தண்டுவடத்தில் இருக்கும் 'லார்டோஸிஸ்' வளைவை அதிகப்படுத்துவதால் முதுகு எலும்பு விரைவில் சேதம் அடைய வாய்ப்புகள் அதிகம்.

அதிக பொருட்களை வைத்து ஹேண்ட்பேக்கை ஒரு பக்கமாக தொங்க விடுவதால் சுவாசத்திறன் குறைபாடு, கழுத்து வலி, முதுகு வலி  போன்ற கோளாருகளை சந்திக்க நேரிடும்.

 குழந்தையின்மையை அதிகரிக்கும் டைட் ஜீன்ஸ்,லெக்கிங்ஸ்

இடுப்பை இறுக்கும் ஜீன்ஸ், லெக்கிங்ஸ் அணிவதினால் அடி வயிற்றில் இருந்து  தொடை பகுதிக்கு செல்லும் நரம்பு கடுமையான‌ பாதிப்பிற்கு உள்ளாகுமாம்.  மேலும் ஜீரண சக்தியை பாதித்து உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.

சருமத்தில்  காற்றுப்படாத  வண்ணம் அணியக்கூடிய ஆடைகளால் வியர்வை சுறப்பி பாதிக்கப்படுவதுடன்,  உஷ்ண கட்டிகள், கிருமிகளின் தாக்குதல், சொறி சிரங்கு போன்ற  பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அழகு என்ற பெயரில் டைட்டாக உடை அணிந்து உடல் நலனை கெடுப்பதை காட்டிலும், நல்ல காற்றோட்டம்  உள்ள பருத்தி ஆடைகளை அணிவதே  நம் சருமத்திற்கும்,  எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP