ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூலிகை செடி இது

கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமிநாசினி . கற்பூரவல்லி செடியை தொட்டியிலும் வளர்க்கலாம். வீடு முழுவதும் ஒரு வித நறுமணம் பரவும். இந்த வாசனையால் விஷப் பூச்சிகள் வீட்டை அண்டாது.
 | 

ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூலிகை செடி இது

சின்னக் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே அம்மாவுக்கும் டென்ஷன் காய்ச்சல் தொடங்கிவிடும். அதிலும் சளி இருமல் சேர்ந்தால் குழந்தைகள் பாடு, படு திண்டாட்டமாகிவிடும். இன்றும் கிராமப் புறங்களில் குழந்தைகள் சளி பிடித்து அவஸ்தைப்பட்டால் கற்பூரவல்லி தான் கைமருந்தாக பயன்படுகிறது. சித்தர்கள் இதனைக் கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவதால் இதற்கு கற்பூரவல்லி என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்வார்கள்.

சளித் தொல்லை தீர :-

கற்பூரவல்லியின் இலையை நசுக்கி சாறுபிழிந்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் இருமல் நீங்கும். சிறு வயது குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் கூட விலகும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்பட்டு அதிக அளவு இருமலும் இருக்கும். இவர்கள் தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து ஓரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமாவின் தீவிரத்திலிருந்து விடுபடலாம்.       

இருமல் விடுபட :-

மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு. மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். ’வரும்முன் காப்போம்’ என்பதற்கேற்ப வாரம் இருமுறை கற்பூரவல்லி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

நுரையீரல் பாதிப்பைச் சீர் செய்ய :-

புகையினால் நுரையீரல் உறுப்புகள் பாதிக்கப்படும். நாளடைவில் அது புற்றுநோயாகக் கூட மாறலாம். நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் கற்பூர வல்லியின் சாறெடுத்து சுண்டக்காய்ச்சி, பாதியளவு எடுத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

அசுத்த நீரை வெளியேற்ற:-

நமது உடலில் சருமப்பகுதியில் பல கோடி துளைகள் உள்ளன. இந்தத் துளையின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது. வியர்வை சுரப்பிகள் நன்றாக செயல்பட கற்பூரவல்லியின் இலையை நிழலில் காயவைத்துப் பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.
கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமிநாசினி . கற்பூரவல்லி செடியை  தொட்டியிலும் வளர்க்கலாம். வீடு முழுவதும் ஒரு வித நறுமணம் பரவும். இந்த வாசனையால் விஷப் பூச்சிகள் வீட்டை அண்டாது. தென்னை மரம் வளர்ப்பவர்கள் அதைச் சுற்றி கற்பூரவல்லி நட்டு வைத்தால் அந்த இடத்தைச் சுற்றி மட்டுமல்ல அருகிலிருக்கும் மரத்தையும் எந்த விதமான பூச்சிகளும் அண்டாது. கற்பூரவல்லி கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டிய ஒரு மூலிகை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP