சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா...

செரிமானப் பிரச்னைகளால் மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தினம் இரண்டு கொய்யா சாப்பிட்டு வந்தால் மெய்யாகவே மலச்சிக்கல் தீரும்.
 | 

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா...

பழங்கள் ஆரோக்யமானவை. ஆனால் விலை அதிகமுள்ள பழங்களில் தான் ஆரோக்யம் அதிகமாக இருக்கிறது என்று ஆப்பிள் போன்ற பழங்க ளைத் தேடி ஓடுபவர்கள் மலிவான சத்துமிக்க கொய்யா போன்ற பழங்களை நாடி வருவது சற்று குறைவுதான்.ஆனால் சமீபகாலங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற பழமாக கொய்யாப்பழத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் கொய்யாப்பழத்தில் குறைந்த அளவு சர்க்கரை இருப்பதோடு இரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

கொய்யா வகை:
கொய்யாப்பழங்களளில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாட்டு கொய்யா எனப்படும் சிவப்பு கொய்யா, மற்றொன்று வெள்ளை கொய்யா. கொய்யா வின் உள்பகுதி வெண்மையான அல்லது சிவப்பு நிற சதைப்பகுதியைக் கொண்டிருக்கும். இதில் வெள்ளை சதைப்பற்று கொய்யாவை விட சிவப்பு நிற சதையைக் கொண்டிருக்கும் நாட்டு கொய்யா சத்துமிக்கது. நீர்ச்சத்து கொண்டது. அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியது.  

இதயத்துக்கு ஆரோக்யமானது:
உடலில் இருக்கும்கெட்ட கொழுப்புகளை நீக்கும் கொய்யா இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமலும் காக்கிறது. இதில் இருக்கும் சத்துக்கள் நம்முடைய செல் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன. கொய்யாவில் புற்று நோயை தடுக்கும் ஆன்டி- ஆக்ஸிடண்டுகள் அதிகம் உள்ளது.  இது புற்று நோய்களை அண்டவிடாமல் செய்கிறது. குறிப்பாக இதில் இருக்கும் லைகோபீனே நிறைந்திருப்பதால் மார்பக புற்று நோய் செல்கள் அழிக்கப்படு கிறது. சிவப்பு கொய்யா இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க செய்கின்றன.

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா...

கர்ப்பிணிகளுக்கு கொய்யா:
கொய்யாவில் வைட்டமின் ஏ, பி 9, பி3,பி6, போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் மக்னீஷியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ்,ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. கருத்தரித்த தாய்மார்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு எவ்வித குறைபாடும் நேராமல் இருக்க கொய்யா சாப்பிடுவதை வழக்கமாக கொள்வது நல்லது. பேறுகாலத்தில் மட்டுமல்ல எப்போதும் மன அழுத்தத்தோடு இருப்பவர்கள் அந்த சிக்கலி லிருந்து விடுபடவும் கொய்யாவில் இருக்கும் சத்துக்கள் உதவுகிறது.  வைட்டமின் சி அதிகமிருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

நீரிழிவுக்கு கொய்யா:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பவர்களுக்கு சிறந்த மருந்து சிவப்பு கொய்யா. சிறுவயது முதலே நாட்டு கொய்யா சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு அபாயம் வராமல் தடுக்கலாம்.

மலச்சிக்கல் தீர கொய்யா:
காரசாரமான உணவுகளால் வயிற்றில் புண்கள் ஏற்பட்டு பாடாய் படுத்தும். உடல் உஷ்ணத்தாலும் வயிறு வலி உண்டாகும். செரிமானப் பிரச்னை களால் மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தினம் இரண்டு கொய்யா சாப்பிட்டு வந்தால் மெய்யாகவே மலச்சிக்கல் தீரும்.

இளமையாக வைக்க கொய்யா:
பழங்களின் தோலை சீவி சாப்பிடுவார்கள். ஆனால் கொய்யா பழத்தில் தோலில் தான் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கிறது. நமது சருமத்தில் உண் டாகும் வறட்சியை நீக்கி, முகத்துக்கு பொலிவு தரும் கொய்யா நம்மை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP