பெண்களின் ‘தலை’யாய பிரச்சனை

பளிச் புன்னகையோடு வளைய வந்தாலே அழகுக் கூடும் என்பார்கள். அது கூந்தலின் வளர்ச்சிக்கும் பொருந்தும். அதிக டென்ஷன்,பரபரப்பான வேலை என்று இருப்பவர்களுக்கு முடி உதிர்தல் ஏற்படலாம்.
 | 

பெண்களின் ‘தலை’யாய பிரச்சனை

பெண்கள் எதற்கு கவலைப்படுகிறார்களோ இல்லையோ. முடிஉதிர்வதற்கு அதிகம் கவலைப்படுவார்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும்  பழமொழிக்கேற்ப கூந்தல் பாதுகாப்புக்கு யார் எதைச் சொன்னாலும் கடைப் பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.கூந்தல் வளர ஷாம்பு, நீண்ட கூந்தலுக்கு எண்ணெய்,பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு என ஓவ்வொன்றுக்கும் ஓவ்வொரு சிகிச்சை எடுக்க தயங்கமாட்டார்கள். அப்படி செய்தாலும் அவையெல்லாம் கூந்தல் பிரச்னைக்குத் தீர்வு கொடுக்குமா என்றால் சந்தேகம் தான். 

பளிச் புன்னகையோடு வளைய வந்தாலே அழகுக் கூடும் என்பார்கள். அது கூந்தலின் வளர்ச்சிக்கும் பொருந்தும். அதிக டென்ஷன், பரபரப்பான வேலை என்று இருப்பவர்களுக்கு முடி உதிர்தல் ஏற்படலாம். இதைத் தடுக்க சரியான தீர்வு சிகிச்சை, பராமரிப்புமுறைகள் தான் என்று சொல்வதைவிட ரிலாக்ஸாக செயல்பட்டாலே போதும். கூடவே நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்யமான உணவு முறையும் கூந்தலுக்கு சக்தி கொடுத்து நன்கு பராமரிக்க உதவும். வெளியில் செல்லும் போது கூந்தலில் படியும் தூசுக்கள் முடியை பிசுபிசுப்பாக்கி கூந்தல் வலுவை குறைக்க செய்வதோடு அதன் வளர்ச்சியையும் தடுக்கிறது. இதனால் போதிய வளர்ச்சி இல்லாமல்  கூந்தல் வறண்டு பொலிவிழக்கிறது.
பராமரிப்பு :- நல்லெண்ணெயை மிதமான சூட்டில் இலேசாக காய்ச்சி கூந்தலில் தேய்த்து, ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் முடியின் வேர்களுக்கு சத்து கிடைக்கிறது.

நல்லெண்ணெய் தேய்க்கும்போது கூந்தலின் அடி விரலிலிருந்து வேர்நுனி வரை தடவ வேண்டும். முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயம்,செம்பருத்தி இலைகள் (15) அரைத்து இரண்டையும் ஓன்றாக்கி ஷாம்புவாக பயன்படுத்தலாம். உடல்குளுமை பெற்றவர்கள் வெந்தயத்தைக் குறைத்து செம்பருத்தி இலைகளை அதிகம் பயன்படுத்தலாம். கூந்தலை அலசியதும் இறுதியாக எலுமிச்சைச்சாறு பிழிந்த தண்ணீரை ஊற்றி அலச வேண்டும். மாதம் இரண்டு அல்லது ஓருமுறை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.
கூடுமானவரை உங்களுக்கென்று பிரத்யேகமான சீப்பை உபயோகப்படுத்துங்கள். தலைக்கு குளித்து வந்ததும் ஹேர் - டிரையரில் கூந்தலைக் காயவைக்காமல் மின் விசிறியின் முன்நின்று திறந்த வெளியில் காற்றோட்டம் அதிகமுள்ள இடத்தில் காய வைக்கலாம். அவசரம் என்றால் மட்டுமே ஹேர்-டிரையர்  உபயோகிக்கலாம்.

ஷாம்புவாக இருந்தாலும், சீயக்காய் பொடியாக இருந்தாலும் ஓன்றை மட்டும் உபயோகப்படுத்துவது நல்லது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் தலைக்கு குளிக்கலாம். கூந்தலை எப்போதும் சிக்கில்லாமல் வைத்திருக்க வேண்டும்.கூந்தலை இறுக்கி அழுத்தமான ரப்பர் பேண்ட் போடவேண்டாம். இது அதன் வளர்ச்சியை சிறிதேனும் பாதிக்கும். கூந்தலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயை அவ்வப்போது மாற்றவேண்டாம். சுத்தமான தேங்காய்எண்ணெய் அல்லது கூந்தல் தைலம் நல்லது.

ஆகாரம் :- இளவயதில் காணப்படும் இளநரையின் தாக்கம் கூட ஆதிக டென்ஷன் காரணமாக ஏற்படுவது தான். அது வராமல் தடுக்க உணவில் அதிக அளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். அது இளநரையை மட்டுமல்ல கருகரு கூந்தல் வளர்ச்சிக்கும் வழி காட்டும்.
எண்ணெய் வைக்கும்போது விரல் இடுக்குகளின் மூலம் தலை முடியின் வேர்வரை தடவி இலேசாக மசாஜ் கொடுத்தால் முடியின் நுனிகளுக்கு ஊட்டம் கொடுத்தது போல் இருக்கும்.      

டென்ஷனை மனதில் ஏற்றாமல் பொறுமையாக மன அமைதியோடு புன்னகையோடு வளைய வந்தால் நீங்கள் விரும்பிய ஆழகிய கூந்தல் கருகருவென நீண்டு வளரும். சருமமும் பொலிவாக இருக்கும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP