Logo

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கொழுப்பு

கர்ப்பிணி பெண்கள் ஒமேக 3 யை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் தாய் மற்றும் சேய்க்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன், குழந்தையின் உடல் மற்றும் புத்தி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
 | 

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கொழுப்பு

ஆரோக்யம் சார்ந்த பிரச்னைகளுக்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் சத்துக்களுள் ஒன்று ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். ஓமேகா 3  என்பது உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய நல்ல கொழுப்பாகும், இது இதய தமணிகளில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நல்ல கொழுப்பை கொண்டுள்ள உணவுகளை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டில் உள்ள நன்மைகள்:

பெண்கள் மாதாவிடாயின் போது கடுமையான வலியை சந்திக்க நேரிடும், அத்தகைய வலையினை போக்க கூடிய அருமருந்தாக இருக்கிறது ஒமேகா 3  ஃபேட்டி ஆசிட்.  

மிக முக்கிய உறுப்பானா இதயத்தை ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் பாதுகாக்கிறது. மாரடைப்பு என்னும் உயிர்கொல்லி பிரச்னை வராமல் தடுக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கொழுப்பு

கர்ப்பிணி பெண்கள் ஒமேக 3 யை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் தாய் மற்றும் சேய்க்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன், குழந்தையின் உடல் மற்றும் புத்தி வளர்ச்சிக்கு  பெரிதும் உதவுகிறது.

ஆஸ்துமா என்னும் சுவாசப்பிரச்னையை சரி செய்யும் தன்மை கொண்டது ஒமேகா 3   ஃபேட்டி ஆசிட்.

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கொழுப்பு

இளம் வயதினர் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒமேகா 3 இருக்கும் உணவுகளும் ஒன்று. இதனை சாப்பிடுவதனால் சிறுவர்களுக்கு ஏற்படும் கற்றல் குறைபாடு, கவனச்சிதறல் போன்றவற்றை சரி செய்து   நல்ல கற்றல் திறனை பெற முடியும்.

ஒமேகா 3  ஃபேட்டி ஆசிட் மூட்டுக்கள் பலவீனப்படும் வாய்ப்புகளை குறைத்து,மூட்டுக்களுக்கு நல்ல ஆரோக்யத்தை கொடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த பிரச்னையை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது இந்த ஒமேகா 3.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகள்:

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய கொழுப்பு

சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி போன்ற மீன் வகைகள், ஆளி விதை, பூசணி விதைகள், ஆலிவ் ஆயில், வால் நட், முட்டை, ஆட்டு இறைச்சி, கடல் சார்ந்த உணவுகள்,  அவகோடா  போன்ற உணவுகளில் அதிகம் இருக்கின்றது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP