கோடையில் இருவேளை குளியல் போடுங்கள்...உடலை குளிர்ச்சியாக்குங்கள்!.

கோடையில் அதிக இரசாயனம் உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. காலை, மாலை இரண்டு வேளை குளித்தால் உடலில் உள்ள வெப்பம் குறைந்து உடல் சிறிதேனும் குளிர்ச்சியடையும்... கோடையில் இருவேளை குளித்து குளு குளு வென கோடையை வரவேற்போம்.
 | 

கோடையில் இருவேளை குளியல் போடுங்கள்...உடலை குளிர்ச்சியாக்குங்கள்!.

வந்தாச்சு கோடை.. .கூடவே உஷ்ணமும்... ஹாட் சம்மரை கூல் சம்மராக மாற்ற  திட உணவுகளை தவிர்த்து, திரவ உணவுக்கு மாறுவதுதான் சிறந்தது என்று மருத்துவர்கள்  பரிந்துரைக்கிறார்கள்.  தினமும் இருவேளை குளியல் என்பதும் மருத்துவரது ஆலோசனைகளில் ஒன்றுதான்.  

உடல் உஷ்ணம், வயிறு எரிச்சல், சருமப் பிரச்னை, வேர்வை, சரும அரிப்பு, வேனிற்கட்டி என்று கோடைக்காலம் வந்தாலே எரிச்சல் தான். குளியல் முறையில் நம் முன்னோர்களைக் கடைப்பிடித்தால் நமக்கும் கோடை குளு குளு கோடைதான். அதிகாலையில்  சூரிய உதயத்துக்கு முன் நாம்  குளிக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்துவார்கள்.

குளியல் என்றால், குளிர்வித்தல் என்று பொருள். குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு வரும் 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல்வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக்கழிவுகள் தேங்கி இருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவுகளை உடலிலிருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய்க் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும். 
குளிக்கும் போது நீரை முதலில் காலின் அடிப்பாகத்தில் ஊற்ற வேண்டும். பிறகு படிப்படியாக முழங்கால், இடுப்பு,நெஞ்சுப்பகுதி இறுதி யாக தலைப்பகுதி என்ற அடிப்படையில் ஊற்ற வேண்டும். எதற்கு இப்படி?

காலில் இருந்து குளிர்ந்த நீரை  ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலையில் குளிர்ந்த நீர் படும்போது வெப்பமானது தலைப்பகுதியிலிருந்து கீழ் நோக்கி சென்று வெளியே செல்ல முடியாமல் உடலுக்குள்ளேயே சுழன்று இருக்கும். 

நமது முன்னோர்கள் குளிக்க செல்லும் போது, குளத்தில் ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். அதற்கு முன் சிறிது நீரை எடுத்து உச்சந்தலையில் தெளித்து கொள்வார்கள். உச்சந்தலையில் அதிக சூடு ஏறக் கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கவேண்டும். 

பிறகு காலிலிருந்து மேல்நோக்கி குளிரும்  வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, இறுதியில் தலை முங்கும்போது கண்,காது வழியே வெப்பக் கழிவுகள் வெளியேறி விடும்.  குளித்துவிட்டு சிறிதுநேரம் ஈரத்துணியோடு  இருப்பது மிகவும் நல்லது. பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோயும் ஓடி விடும்..குளியல் என்பது உடலை குளிர்விக்கத்தான் அழுக்கை நீக்க அல்ல என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும். 

கோடையில் அதிக  இரசாயனம் உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.  காலை, மாலை இரண்டு வேளை குளித்தால் உடலில் உள்ள வெப்பம் குறைந்து உடல்  சிறிதேனும் குளிர்ச்சியடையும்...
கோடையில் இருவேளை குளித்து குளு குளு வென  கோடையை வரவேற்போம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP