கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

அரிசி சாதம் வடித்த கஞ்சியில் குளிர்ச்சி தன்மை அதிகம் என்பதால், அதை, சருமத்தில் தேய்த்து ஊறவைத்து பின் குளித்து வர வேர்குரு காணாமல் போய்விடும். மேலும், குப்பமேனிக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட நாட்பட்ட வேர்குருக்களும் கொட்டிவிடும்.
 | 

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

நம் உடலில் சேர்ந்துள்ள உப்பு மற்றும் கழிவுகளை வெளியேற்றும் சிறிய துளைகளை கொண்ட வியர்வை சுரப்பியின் வாயில்களில், தூசி மற்றும் அழுக்கு, பாக்டீரியா தொற்று போன்றவற்றால்  அடைப்பு ஏற்பட்டு, சிறு கட்டிகள் தோன்றுகிறது. இந்த கட்டிகள் வியர்வை அதிகம் சுரக்கும் வெயில் காலங்களில் ஏற்படுவதால் வியர்குரு அல்லது வேர்குரு என அழைக்கப்படுகிறது. இந்த வேர்குருக்கள் அதிக எரிச்சலையும், அரிப்பையும் கொடுக்க கூடியவை. இது நோய் தொற்றாக இல்லாவிட்டலும், கவனிக்காமல் விட்டு விட்டால், படை, தேமல், சரும நோய் ஆகியவற்றுக்கு ஆளாக நேரிடும்.

வேர்குருவை தடுக்க கூடிய வீட்டு மருத்துவம் பற்றி பார்க்கலாம்..

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

அரிசி சாதம் வடித்த கஞ்சியில் குளிர்ச்சி தன்மை அதிகம் என்பதால், அதை, சாருமத்தில் தேய்த்து ஊறவைத்து பின் குளித்து வர வேர்குரு காணாமல் போய்விடும். மேலும் பழைய சோற்று கஞ்சியை வாரத்தில் மூன்று முறை, சின்ன வெங்காயத்துடன் உட்கொண்டு வர, உடல் குளிர்ச்சி அதிகரித்து வெப்ப கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !


வேப்பிலை, வேர்குரு பிரச்னைக்கு நல்ல தீர்வாக இருக்கும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை அதிகம் இருப்பதால் வேர்குருவில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கள் தடுக்கப்பட்டு, விரைவிலேயே நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும், வேப்பிலையுடன் சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வேர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் குணமாகும்.

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

பருவகால பிரச்னையான வேர்குருவிற்கு சரியான மருந்து பருவகால உணவான நுங்கு, கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை எடுத்துக்கொள்வதே, என்கிறது ஆயுர்வேதம். நுங்கை உட் கொள்வதுடன் அதன் சாற்றை சருமத்தின் மேல் பூசி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

திரிபலா பொடியை சுடுநீரில் கலந்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் அருந்தாலாம். அதனுடன் திரிபலா பொடியை கரைத்து உடலில் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் சூடு குறைந்து வேர்குருவிற்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

சந்தனம், மஞ்சள் கலந்து உடலில் பூசி குளிக்க வேண்டும். இந்த கலவையில் அதிகப்படியான கிருமிநாசினி இருப்பதால் வேர்குரு விரைவிலேயே குணமாகும்.

அருகம்புல், சந்தனம் ஆகியவற்றை மையாக அரைத்து வேர்குருவில் பூச வேர்குரு பட்டு உதிர்ந்து விடும்.

பாசிப்பயிறு, கடலை பருப்பு, வெந்தயம் மூன்றையும் சமமாக எடுத்து பொடி செய்து தேய்த்து குளிக்க வேர்குரு பிரச்னை அண்டாது.

குப்பமேனிக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட நாட்பட்ட வேர்குருக்களும் கொட்டிவிடும்.

சாமந்திப்பூக்களை பிளிந்து சாறு எடுத்து உடலில் பூசிக்குளிக்க வேர்குரு பிரச்னை குறையும்.

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

வேர்குரு பிரச்னை குணமாக சீரகம், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொடி செய்து சாப்பிட வேண்டும்.

கற்றாழை ஜெல்லை சோப்பு போல உடல் முழுவதும் தேய்த்து குளிக்க உடல் சூடு தணிந்து வேர்குரு மறையும்.

வேங்காயத்தை பிளிந்து அதில் வரும் சாற்றை வேர்குரு மீது தடவ விரைவில் வேர்குரு மறைந்து விடும்.

மருதாணியில் நோய் எதிர்ப்பு அழற்சி  அதிகம் இருப்பதால் மருதாணியை அரைத்து வேர்குரு வந்துள்ள இடத்தில் தடவ வேர்குரு உதிர்ந்து விடும்.

வெட்டி வேர் பொடியினை பவுடர் போல உடலில் பூசி வர வேர்குரு நம்மை அண்டாது.

கோடைகால வியர்குருவை கட்டுப்படுத்தும் அரிசி சாதக் கஞ்சி !

தயிரை சருமத்தில் பூச உடல் சூடு குறைந்து வேர்குரு பிரச்னை தீரும்.

பப்பாளி சாற்றை உடலில் தேய்ப்பதால் வேர்குரு சரியவதுடன், சருமமும் பொலிவு பெறும்.

உடல் சூடி அதிகம் உள்ள நேரங்களில் வறுத்த உணவுகளை தவிர்த்து விட்டு, உடலுக்கு தேவையான நீருடன், குளிர்ச்சியான உணவுகளையே உட்கொள்ள வேண்டும், மேலும் காற்றோட்டம் உள்ள அறைகளில் உறங்க வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க  உடல் சூடு ஏற்படாது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP