பிரச்னைகள் என்பது வேறு.. மன அழுத்தம் என்பது வேறு

குழந்தைகள் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியை மட்டுமே காண வேண்டும். விரும்பியவற்றை விருப்பமுற்று கேட்கும் முன்பே நிறைவேற்றிட வேண்டும். அவர்களது ஆசையை அப்படியே ஏற்று நிறைவேற்றிட வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களைத் தான் இன்று அதிகம் காணமுடிகிறது.
 | 

பிரச்னைகள் என்பது வேறு.. மன அழுத்தம் என்பது வேறு

காலையிலேயே டென்ஷன் பண்ணாதீங்க மம்மி என்று எல்கேஜி படிக்கும் மூன்று வயது குழந்தை கூட சர்வ சாதாரணமாக சொல்லும் அளவுக்கு டென்ஷம் பின்னி பிணைந்திருக்கிறது. வாழ்வை இனிமையாக கழிக்க  அவ்வப்போது சந்திக்கும் சிலவற்றை திறமையாக எதிர்கொண்டாலே போதும். பிரச்னைகள் என்பது வேறு.. மன அழுத்தம் என்பது வேறு என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள். பரபரப்பான உலகில் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் சிலருக்கு மூச்சு விடுவதில் கூட நிதானம் இருப்பதில்லை. பொறுமையாக இருக்க வேண்டும் என்று ஒருவர் சொல்லும்போதே அதைக் கேட்கும் பொறுமையைக் கூட இழந்துவிடுகிறோம். 

வளரும் பருவத்திலேயே வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், நிதானம், வாழ்வியல் முறைகளைக் கற்று வளர்ந்தவர்கள் வளரும் பருவத்தில் வரும் எத்தகைய நெருக்கடி சூழல்களையும் சமாளிக்கும் திறமைகளைப் பெற்று வாழ்க்கையைச் சிறப்பாக கடக்கிறார்கள். குழந்தைகள் எல்லாவற்றிலும்  மகிழ்ச்சியை மட்டுமே காண வேண்டும். விரும்பியவற்றை விருப்பமுற்று கேட்கும் முன்பே நிறைவேற்றிட வேண்டும். அவர்களது ஆசையை அப்படியே ஏற்று நிறைவேற்றிட வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களைத் தான் இன்று அதிகம் காணமுடிகிறது. அத்தகைய குழந்தைகள் எதிர்காலத்தில் வரும் சிறு பிரச்னைகளையும் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். ஒருவழியாக அதற்கான தீர்வுப்பாதையைக் கண்டுபிடிக்கும் முன்பே அடுத்தடுத்த பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கும்.  பொருளாதாரம் மட்டுமே இவர்களது பிரச்னையை அதிகரித்து மன அழுத்தத்தை உண்டாக்கும் என்று சொல்லமுடியாது.  

பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் மறுபுறம் இவர்களது தேவைகளைப் பெருக்கி கொள்ள உழைப்பதை போல மன அழுத்தத்தையும் சேர்த்து சம்பாதிக்கிறார்கள். குடும்ப தேவை, அலுவலகத்தில் நெருக்கடி, பிள்ளைகள் வளர்ப்பு, அவர்களது கல்வி, வீட்டு கடன், கார் லோன், குடும்ப பாதுகாப்பு என்று மனதளவில் இத்தகைய விஷயங்களை சுழற்சி முறையில் ஓடவிட்டபடி இயந்திரமாய் இயங்குகிறார்கள். இவைதான் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. இந்த அழுத்தம் தான் தூக்கமின்மையை உண்டாக்கி உடல் பருமனில் ஆரம்பித்து நோய்களின் பாதையில் நம்மை நிறுத்தி இறுதியில் இதய நோய் வரை உண்டாக்கிவிடுகின்றன. இன்று  பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தால் தான் அதிகம் நோய்வாய்படுகின்றனர் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். சிறிய பிரச்னையைப் பெரிதாக்கி பார்க்கும் மனப்பாங்கில் இருப்பவர்கள் தான் எப்போதும் டென்ஷானாயிருக்கு என்று சொல்வார்கள். அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் கூட அர்த்தமே தெரியாமல் டென்ஷன் என்று சொல்கிறார்கள். மன அழுத்தத்திலிருந்து வெளியேவர அன்றாட வாழ்வில் சிறிய பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும்.

பிரச்னைகள் என்பது வேறு.. மன அழுத்தம் என்பது வேறு

பிரச்னைகள் பற்றி மனம் சுழலும் போது நம் உடம்பில் கார்ட்டிசால் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரந்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதைக் குறைக்க எண்டார்பின் ஹார்மோன் உதவி புரிகிறது.இதற்கு பிரத்யேகமான மாத்திரைகள் இல்லை. மனம் விட்டு வாய்விட்டு சிரித்தாலே வேண்டிய ஹார்மோன் சுரந்து மூளையைத் தூண்டும். எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் இருங்கள். நீங்கள் இருக்கும் இடம் புன்னகையால் நிரம்பியிருக்க வேண்டும். அழுது வடியும் சீரியல்களைத் தவிர்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளை அரைமணிநேரமாவது பார்த்து சிரியுங்கள். மனம் இலேசாவதை உணர்வீர்கள்.

பிரச்னைகள் என்பது வேறு.. மன அழுத்தம் என்பது வேறு

சுவாசிப்பதில் எதற்கு வேகம்? எப்போதாவது மூச்சை இழுத்து பொறுமையாக வெளியேற்றியிருக்கிறீர்களா? யோசியுங்கள்... மனதை அமைதிப்படுத்த செய்யும் தியானமும், யோகா வகுப்பும் சொல்லும் முதல் பயிற்சி மூச்சை ஆழமாக இழுத்து பொறுமையாக வெளியேற்றுவதுதான். தினமும் கட்டாயம் 10 நிமிடங்களை ஒதுக்கி அமைதியான காற்றோட்டமுள்ள இடத்தில் அமர்ந்து உங்கள் கைகளை வயிற்றின் மேல் வைத்து மூச்சை ஆழமாக வயிறு வரை உள்ளிழுத்து பொறுமையாக வெளியேற்றுங்கள். அடிவயிற்றின் அசைவுகளை நன்றாக உணர்வீர்கள். 30 முறையாவது இப்படி செய்து பாருங்கள். என்ன ஆச்சர்யம் மனதோடு இணைந்து உடலும் இலேசாகிவிட்டது என்று சொல்வீர்கள். காலையில் இந்தப் பயிற்சி செய்யும் போது மட்டுமல்ல ஒவ்வொருமுறையும் மூச்சை எப்போதும் போல் வேகமாக்காமல் மூச்சை ஆழமாக இழுத்து பொறுமையாக வெளியேற்றுங்கள். நாளடைவில் மனதை உலுக்கும் பிரச்னைகளிலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் வெளியேறுவீர்கள்.

பிரச்னைகள் என்பது வேறு.. மன அழுத்தம் என்பது வேறு

ஓய்வு நேரங்களை குடும்பத்துடன் கொண்டாடுங்கள். மாதம் ஒருமுறை அருகில் உள்ள இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்துக்கும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திட்டமிட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவாருங்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சமூகத்தின் பிரச்னைகளை அலசுங்கள். குடும்பம் என்பது அழகிய பிருந்தாவனம் என்பதை புரிய வையுங்கள். அவர்களது விருப்பத்தைக் கேட்டு அறியும் போது குழந்தைகளுக்கு குடும்பத்தின் வளர்ச்சியில் பற்று ஏற்படும். தன் பெற்றோர்கள் தங்களுக்காக வாழ்கிறார்கள் என்று பெரியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  தேவையற்ற பழக்கங்களின் மீது நாட்டம் கொள்ளாமல் அவர்களது போக்கில் நல்ல முறையில் வளர்வார்கள். குழந்தைகளின் இந்த மாற்றம் உங்களுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் நல்மருந்தாக இருக்கும். 

இறுதியாக நீங்கள் மன அழுத்தத்திலிருந்து முழுமையாக வெளியே வரவேண்டும் என்றால் பிரச்னைகளை உங்கள் மனதிற்குள் ஒளித்து வைக்காதீர்கள். தைரியமாக எதிர்கொள்ளுங்கள். அதற்கான தீர்வுகள் உங்கள் கண் முன் நிற்கும். அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்தாலே போதுமானது. ஆடம்பர பொருள்களை பொருளாதார நெருக்கடியில் வாங்கி மேன்மேலும் மன அழுத்தத்தை அதிகரிக்காமல் உங்கள் பணியிலும் குடும்பத்திலும் கவனம் செலுத்துங்கள். மன அழுத்தம்  உங்களை நெருங்காது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP