கர்ப்ப கால பராமரிப்புகள் : தவிர்க்க வேண்டியவை 

ஒரு குழந்தை முழு ஆரோக்யத்தோடு பிறப்பதை கருவுற்ற காலத்தில் செய்ய கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட பாதிக்கக் கூடும். கர்ப்ப கால பராமரிப்புகளில் கட்டாயம் செய்யகூடிய செயல்களை போலவே, கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில நடைமுறை செயல்களும் உண்டு.
 | 

கர்ப்ப கால பராமரிப்புகள் : தவிர்க்க வேண்டியவை 

கர்ப்ப காலம் என்பது பெண்ணின் வாழ்வில் பொற்காலம், இந்த தருணத்தில் கருவுற்ற பெண்ணின் பாதுகாப்பு மிக அவசியம். ஒரு குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறப்பதை, கருவுற்ற காலத்தில் செய்ய கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட பாதிக்கக் கூடும்.  கர்ப்ப கால பராமரிப்புகளில் கட்டாயம் செய்யகூடிய செயல்களை போலவே, கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில நடைமுறை செயல்களும் உண்டு. முந்தைய கட்டுரையில் கர்ப்பகாலத்தில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய செயல்முறைகள் சிலவற்றை பார்த்தோம். இப்போது செய்யக்கூடாத செயல்களை பார்ப்போம்.

நாகரிக உலகில் இறுக்கமாக உடை அணிவது நடைமுறை வழக்கம் ஆகிவிட்டது. ஆனால் இவ்வாறு உடலை அழுத்தி பிடித்தவாறு உடை அணிவதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதிலும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் மார்பு மற்றும் இடுப்பு பகுதியை அழுத்தியவாறு இறுக்கமாக உடை அணியக் கூடாது.  

கர்ப்பம் தரித்த கால கட்டத்தில் மசக்கை, வாந்தி ஏற்படுவது இயல்பான விஷயம். அதனை ஏற்றுக் கொள்ளாமல் மசக்கையை கட்டுப்படுத்த மாத்திரைகளை உட்கொள்ள கூடாது.

கர்ப்ப கால பராமரிப்புகள் : தவிர்க்க வேண்டியவை 

அழகு முக்கியம் தான். ஆனால் அதை விட வயிற்றில் இருக்கும் குழந்தை முக்கியம். எனவே கர்ப்ப காலங்களில் வேக்சிங்,பிளீச்சிங், எண்ணெய் மசாஜ்  போன்ற அழகு சார்ந்த செயல்களை தவிர்ப்பது நல்லது.

மன உளைச்சல் உடல் சார்ந்த பல உபாதைகளுக்கு காரணமாக இருப்பவை. அதிலும் கருவுற்ற முதல் மூன்று வாரங்களில் கரு களைவதற்கான காரணங்களில் முக்கியமாக சொல்லப்படுவது மனஉளைச்சல் தான்.  இது உங்களை மட்டுமல்ல. வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கக் கூடும். எனவே மன உளைச்சலை ஏற்படுத்தகூடிய பயம், கோபம், சோகம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

 கர்ப்ப காலத்தில் அடிக்கடி தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை தவிப்பது நல்லது. இது குறித்து மருத்துவ ஆலோசனை மிக அவசியமாகும்.

கர்ப்ப கால பராமரிப்புகள் : தவிர்க்க வேண்டியவை 

இரவு நேர தூக்கத்தை எக்காரணத்தாலும் தவிர்க்கக் கூடாது. அதேபோல பகலில் அதிக நேரம் தூங்குவதால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாறுதல் காரணமாக தோல் சார்ந்த பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம் அல்லது மருத்துவ ஆலோசனை பெறலாம். மாறாக கெமிக்கல் நிறைந்த லோஷன்களை பயன்படுத்தக் கூடாது.

அதிக நேரம் வாகன பயணம் செய்வது, மிகப்பெரிய ராட்டினங்களில் விளையாடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

உயரமான கட்டிடங்களுக்கு செல்வது, படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறி இறங்குவதை தவிர்க்க வேண்டும்.

ஓடுவது, மிக வேகமாக நடப்பது, ஹைஹீல்ஸ் உள்ள செருப்புகள் அணிவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சிறுநீர் , மலம் போன்றவற்றை அடக்குதல் கூடாது. இதனால் சிறுநீரக தொற்று போன்ற சீரியசான கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

கர்ப்ப கால பராமரிப்புகள் : தவிர்க்க வேண்டியவை 

உடல் சூட்டை அதிகப்படுத்தும் பிளாஸ்டிக் சேர்கள், நைலான் சேர்களில் அதிக நேரம் உட்கார கூடாது, அதேபோல சமன் இல்லாத இருக்கைகளில் அமரக்கூடாது. 

சிறு சிறு வேலைகளை செய்யலாமே தவிர அதிக எடையுள்ள சுமைகளை தூக்குவது. ஓய்வில்லாமல் நீண்ட நேரம், உடல் சோர்வை உண்டாக்க கூடிய வேளைகளில் ஈடுபட கூடாது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவது, உடல் எடையை கவனிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற செயல் முறைகளை எந்த காரணத்திற்காகவும் தவிர்க்க கூடாது.

உடல் எடையை கட்டுப்படுத்துவதாக கூறி அதிக உடல் பயிற்சி செய்தல், உணவை தவிர்த்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட கூடாது. குறிப்பாக எக்காரணத்தை கொண்டும் பட்டினியாக இருக்க கூடாது.

கர்ப்ப கால பராமரிப்புகள் : தவிர்க்க வேண்டியவை 

பயத்தை உண்டாக்க கூடிய ஹாரர் படங்களை பார்ப்பது. இருள் சூழ்ந்த இடங்களுக்கு போவது , சத்தம் அதிகமுள்ள இடங்களுக்கு போவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தாய்க்கு ஏற்படும் அதிர்ச்சியால் குழந்தை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும். 

முடிந்தவரை நோய் தொற்று ஏற்படாதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், நோய் தொற்றுள்ள நபர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. 

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP