எதுவும் செய்யாமல் இருந்தாலே உடல்பருமன் குறைந்துவிடும்

சரிவிகித உணவு, எப்போதும் வெந்நீர், அதிகாலை பயிற்சி இவையெல்லாம் தொடர்ந்து சீராக கடைப்பிடிக்கும் போது உடல் பருமனும் சீராக சத்து குறையாமல் உடல் மெலியத்தொடங்கும்…
 | 

எதுவும் செய்யாமல் இருந்தாலே உடல்பருமன் குறைந்துவிடும்

உடல் பருமனைக் குறைக்கணுமா.. இதைச் செய்யுங்க... இப்படித்தான் தொடங்குகிறது ஏகப்பட்ட கட்டுரைகள்...  உடல் பருமனைக் குறைக்கும் கட்டுரைகள் இல்லாத இதழ்கள் எவையும் முழுமைப் பெறுவதில்லை... தேடி தேடிப்படிக்கும் உடல்பருமனைக் குறைக்கும் கட்டுரைகள் உண்மையில் பலனளிக்கிறதா என்று பார்ப்பதற்குள்... அடுத்த கட்டுரையில் வேறு வழி முறைகளை வலியுறுத்தி படித்து அதைப் பின்பற்றுகிறோம்...

இப்படியாக வாய் வழியே, செவிவழியே, படிக்கும், பார்க்கும் அத்தனையையும் சேர்ந்து பின்பற்றி ஒருவழியாக எடையைப் பரிசோதித்தால் உடல் எடை மேலும் 2 கிலோ கூடி விடும்..

சரி என்னதான் செய்ய வேண்டும்... எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும்... உடல் எடை தானாகவே குறைந்துவிடும்.. எடை குறைய பகீரத பிரயத்தனம் செய்யாமல் அமைதியான முறையில் கொடுத்துள்ளவற்றைப் பின்பற்றுங்கள்… படிப்படியாக சத்துக்களை இழக்காமல் உடல் எடை குறைவீர்கள்…

தினமும் காலையில் எழும் நேரத்திற்கு அரை மணிநேரம் முன்னதாக எழுந்தாலே போதும்.. இயன்றால் நடைபயிற்சி இல்லையென்றால் ஆழ சுவாசிக்கும் பயிற்சி.. அதைத் தொடர்ந்து தோர்பிகரணம்.. இவையே போதுமானது..

உணவை பொறுத்தவரை பட்டினி கிடப்பதோ, குறைந்த அளவு எடுத்துக்கொள்வதோ, காய்கறிகள், பழங்கள் மட்டுமே என்று இருப்பதோ தேவையில்லை. ஆவியில் வேக வைத்த உணவுகளை தாரளமாக எடுத்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் வயிறு புடைக்க உண்பதை விட அரைவயிறாக எடுத்துக்கொண்டு பசிக்கும் போது மேலும் உண்ணலாம். உதாரணமாக 6 இட்லி சாப்பிடுபவர்கள் மூன்று மூன்றாக  எடுத்துகொள்வது நல்லது.
 

உணவை மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிடும் போது செரிமானம் எளிதாவதோடு தேவையற்ற கொழுப்புகள் சேராது.  சாப்பிட்டு முடித்ததும் வெந்நீரை மட்டுமே பருகுங்கள்.. வெந்நீர் கொழுப்புகளை சேர்க்காது. இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் தன்மையைக் கொண்டது. சாப்பிடும் போது கவனம் முழுக்க உணவின் மீது மட்டுமே இருந்தால் எடுத்துக் கொள்ளும் அளவும் அதிகப்படியாக இருக்காது.

அதே நேரம் அதிக இனிப்பு கலந்த குறிப்பாக வெள்ளை சர்க்கரை சேர்த்த  உணவுகள், பொறித்த உணவுகளை தவிர்த்து விடுவதே நல்லது.. காலையும் இரவும் சாப்பாட்டைத் தவிர்ப்பதும் நல்லது… மாறாக ஆவியில் வேக வைத்த மிருதுவான உணவை எடுத்து கொள்வது நல்லது… குறிப்பாக இரவு நேரங்களில் அரைவயிறு எடுத்துகொள்ள வேண்டும்….

மாலை நேரங்களில் நொறுக்குத் தீனிகளைக் குறைத்து சுண்டல், பயிறு வகைகளை எடுத்துக்கொள்ளலாம். மாடிப்படிகளில் மின் தூக்கிகளைத் தவிர்த்து படிகளில் ஏறுவதைப் பழக்கமாக்கி கொள்ளுங்கள்… அருகிலிருக்கும் மார்க்கெட், கடைகளுக்கு நடந்து செல்லுங்கள்.. மன அழுத்தமின்றி மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்…

சரிவிகித உணவு, எப்போதும் வெந்நீர்,  அதிகாலை பயிற்சி இவையெல்லாம் தொடர்ந்து சீராக கடைப்பிடிக்கும் போது உடல் பருமனும் சீராக சத்து குறையாமல் உடல் மெலியத்தொடங்கும்… 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP