உரமில்லா காய், கனிகளை பெறுவது எப்படி? 

கூடுமான வரை, சரியான சீசன்களில் விளையும் பழங்கள், காய்கறிகளை உண்பது சிறப்பு. உதாரணத்திற்கு, மாம்பல சீசனே இல்லாத காலத்தில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கிச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும். அதே விதிமுறைதான் காய்கறிகளுக்கும் பாெருந்தும்.
 | 

உரமில்லா காய், கனிகளை பெறுவது எப்படி? 

வளர்ந்து வரும் விஞ்ஞானத்தால், மனிதன் எதையும் உடனுக்குடன் பெற முடிகிறது. ஒருபுறம் அதில் நன்மை இருந்தாலும், மற்றொருபுறம், மிகப் பெரிய ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு வந்த போது, அறிவியலை கொண்டாடிய நாம், இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் கடைபிடிப்பதோடு, அதைமுற்றிலும் தடை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். 

அடிப்படையில் விவசாய பூமியான நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையால், மக்களின் உணவுத் தேவை அதிகரித்துள்ளது. அதற்காக, விவசாயத்தை மேம்படுத்தும் முயற்சிக்கு பதிலாக, நிலத்தை சுருக்கி, அதில் வேகமாக பயிர்களை விளைவிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 

எத்தனையோ உரங்களை பயன்படுத்தி, பருவமே இல்லாத காலங்களில் கூட அந்த பயிர்களை விளைவிக்க கற்றுக்கொண்டுவிட்டோம். விளைவு, இந்த பருவத்தில் இந்த இந்த காய்கறிகள், பழங்கள் தான் கிடைக்கும் என்ற நிலை மாறி, நாம் விருப்பப்படும் நேரத்தில் விரும்பும் பயிரை விளைவித்து உண்ண முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. 

உரமில்லா காய், கனிகளை பெறுவது எப்படி? 

ஆனால், அவ்வாறு விளைவிக்கப்படும் பயிர்களில் அதற்கே உரிய இயற்கையான சத்துக்களுக்கு பதிலாக, உரங்கள் தான் அதிகம் தான் அதிகம் உள்ளன. ஆம், நாம் இன்று உண்ணும், 90 சதவீத காய்கறிகள், பழங்கள் அதிகப்படியான உரங்களால் செயற்கையாக அதீதமாக விளைவிக்கப்படுகின்றன. 

இதனால், இவற்றை உண்ணும் மனிதர்களுக்கு, சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் பாதிப்படைவதுடன், இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பும், சமயத்தில் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. ஆம், இன்று நாம் உண்ணும் உணவுகளில் பல மெல்லக் கொல்லும் ஸ்லோ பாய்சன் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். 

உரமில்லா காய், கனிகளை பெறுவது எப்படி? 

எனினும், பூச்சிக் கொல்லி, உரங்கள் இல்லாமல் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள் கிடைப்பது மிகவும் அரிது. கிடைக்கும் காய், பழங்களிலிருந்து உரம், பூச்சிக் கொல்லிகளை அகற்றி, எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவே இந்த பதிவு. 

நீங்கள் கடைகளில் வாங்கும் காய்கறிகள், பழங்களை, சிறிதளவு பேக்கிங் சோடா கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு, அதன் பின், அவற்றை நன்னீரில் 15 - 20 வினாடிகள் வரை கழுவவும். பின், அதன் மேல் தோலை சீவிவிட்டு, அவற்றை சமையலுக்கோ அல்லது அப்படியே உண்ணவோ பயன்படுத்தலாம். 

உரமில்லா காய், கனிகளை பெறுவது எப்படி? 

இப்படிச் செய்வதால், காய், பழங்களில் ஏறிய உரம், 90 சதவீதம் வெளியேற்றப்படும். காய்கறிகளை சமைக்கும் போது, கூடுமான வரை, அடுப்பில் அவற்றை திறந்து வைத்தே சமைப்பது நல்லது. ரசாயனங்கள் எப்போதும், ஆவியாகி மேல்நோக்கி செல்லும் தன்மை உடையது என்பதால், அவை ஆவி வடிவில் வெளியேற வாய்ப்புள்ளது. சமைத்து முடித்த பின், அவற்றை மூடி வைக்கலாம். 

கூடுமான வரை, சரியான சீசன்களில் விளையும் பழங்கள், காய்கறிகளை உண்பது சிறப்பு. உதாரணத்திற்கு, மாம்பல சீசனே இல்லாத காலத்தில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கிச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும். அதே விதிமுறைதான் காய்கறிகளுக்கும் பாெருந்தும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP