பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னை : என்ன காரணம்?

சினைப்பை நீர்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்று பார்த்தால் அதற்கான முழு முதல் காரணமாக வந்து நிற்பது நமது வாழ்க்கை மாற்றம் தான். நாகரிகம் என்ற பெயரில் நாம் தவிர்த்த பல உணவு பொருட்கள் உண்மையில் நம் உடலை காக்கும் அரணாக இருந்தவை.
 | 

பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னை : என்ன காரணம்?

குழந்தை பேறு பெண்மைக்கு மட்டுமே கிடைக்கும்  வரம், ஆனால் பலருக்கு இந்த வரம் மருத்துவ உதவியில்லாமல் கிடைப்பதே இல்லை. ஒரு காலகட்டத்தில், ஏன் மருத்து வசதி இல்லாத காலகட்டத்தில்  கூட  குழந்தை இல்லா தம்பதியர்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர். நாகரிக மாற்றம் இயற்கையாக நமக்கு கிடைத்த பல பொக்கிஷ நன்மைகளை இல்லாமலேயே செய்துவிட்டது என்பதற்கு சரியான உதாரணமாக குழந்தையின்மையையும், சுகபிரசவம் குறைக்கப்பட்டதையும் கூறலாம்.

முன்பெல்லாம் குழந்தையின்மைக்கான மருத்துவமனைகள் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்கு மட்டுமே இருந்தன. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் மகப்பேறு மருத்துவமனைகள் தான். திருமணமான பெண் அல்லது ஆணின் தாயிடம் எதாவது விஷேசம் உண்டா என்று கேட்ட சூழல் மாறி, எந்த குழந்தையின்மை  மருத்துவமனைக்கு போகப்போறிங்க என்று சர்வசாதாரணமாக கேட்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற அவல நிலைக்கு என்ன தான் காரணம் என்று பார்த்தால் முதல் காரணமாக மருத்துவர்களால் சொல்லப்படுவது... 

பீசிஓடி அதாவது சினைப்பை நீர்க்கட்டிகள்:

பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னை : என்ன காரணம்?

சினைப்பை நீர்க்கட்டிகள் ஏன் ஏற்படுகின்றன என்று பார்த்தால் அதற்கான முழு முதல் காரணமாக வந்து நிற்பது நமது வாழ்க்கை முறை மாற்றம் தான். நாகரிகம் என்ற பெயரில் நாம் தவிர்த்த பல உணவு பொருட்கள் உண்மையில் நம் உடலை காக்கும் அரணாக இருந்தவை. அத்தகைய உணவுகளை தவிர்த்துவிட்டு இன்று நாம் சாப்பிடும் நாகரிக உணவுகளான ஜங் புட், குளிர்பானங்கள், ஃபாஸ்ட் புட் போன்றவை நம் வாழ்நாளை குறைப்பதுடன், நமது சந்ததி விருத்தியையும் முற்றிலுமாக அழித்து விடுகிறது.  இத்தகைய உணவுகளை உட்கொள்வதால் உடல் பருமன், மெட்டபாலிஷ அளவில் மாற்றம், நீரிழிவு போன்ற எண்ணற்ற உடல் ரீதியான கோளாறுகளை சந்திக்க நேரிடும். இதுபோன்ற காரணங்களும் குழந்தையின்மைக்கு முக்கியமான காரணங்களாக சொல்லப்படுகிறது.

மன அழுத்தம்:

பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னை : என்ன காரணம்?

மன அழுத்தமும் குழந்தையின்மைக்கான காரணமாக சொல்லப்படுகிறது. அந்த காலங்களில் திருமணமான புது தம்பதிகள் தனிக்குடித்தனம் செல்லமாட்டார்கள். ’பாவம் சின்ன புள்ள அவளுக்கு ஒன்னும் தெரியாது, தனிக்குடித்தனம் இப்ப வேண்டாம் என பெண்ணின் பெற்றோர்களே கேட்பார்கள்”. ஏனென்றால் கூட்டு குடும்பத்தில்.  பொறுப்பை முதன் முறை சந்திக்கும் பெண்ணுக்கு அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை சமாளிக்கும் சுமை குறைவாகவே இருக்கும் என்பதால் தான். இதனால் மன அழுத்தமும் குறைவாகவே இருக்கும். ஆனால் இன்றைய நகர வாழ்க்கை முறையில் திருமணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. திருமணத்திற்கு முன்பு வரை பட்டாம்பூச்சியாய் சுற்றி திரியும் இளம் பெண்கள், திடீரென அனுபவம் இல்லா குடும்ப சுமையை முழுமையாக சுமக்க நேரிடுகிறது. இதனால் மனஅழுத்தமும் இரு மடங்காக உயர்ந்து கடைசியில் குழந்தையின்மை என்னும் பெரும் சுமையாக போய் முடிந்து விடுகிறது.

போதிய உடற்பயிற்சியின்மை:

பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னை : என்ன காரணம்?

பெண்களுக்கு வரும் பல பிரச்னைகளுக்கு உடற்பயிற்சியின்மை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இயந்திரத்தனமான வாழ்க்கை என்பது போல எதற்கெடுத்தாலும் மெஷினை மட்டுமே தேடி ஓடுகின்ற கால சூழலில் மாட்டிக்கொண்டுள்ளோம். இதனால் உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்டது.  அதோடு பல நன்மைகளை நல்கும் நடைபயிற்சியை மருத்துவரின் அறிவுறுத்தலின்றி நம்மில் பலர் மேற்கொள்வதேயில்லை.இதுபோன்ற இயந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு காரணம் தான் பீசிஓடி என்னும் பிரச்னையை சந்திக்க.

கர்ப்பத்தை தள்ளி போடுதல்:

பெருகி வரும் குழந்தையின்மை பிரச்னை : என்ன காரணம்?

நாகரிக உலக பெண்கள் தங்களது முன்னேற்றத்தை திருமணம் பாதிக்கலாம் என்கிற கருத்தின் அடிப்படை சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதில். திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பேறு தங்களது இன்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என கருதி முதல் கருவை கலைக்கும் செயல் வரை இறங்கி விடுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் குழந்தையின்மை என்னும் கொடுமையான பரிசை கொடுத்து விடுகிறது. உருவான கருவை கலைத்து விட்டு பின்னர் குழந்தை இல்லையென்று மருத்துவமனையை தேடி அழையும் இளைய சமூக அவலம் இன்றைய சூழலில் மிகவும் அதிக அளவில் காணப்படுகிறது. 

இந்த முறையற்ற உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளால் பூப்பெய்திய சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் கூட பிசிஓடி பிரச்னை வரலாம். எனவே சிறு வயதிலிருந்தே பெண் பிள்ளைகளுக்கு முறையான வாழ்க்கை முறைகளை கற்றுத்தருவதன் மூலம் வரும் காலங்களில் குழந்தையின்மை போன்ற தீய விளைவுகளிலிருந்து வரும் தலைமுறைகளை காப்பாற்ற முடியும்.

 அடுத்த கட்டுரையில் குழந்தையின்மை பிரச்னையை சரி செய்யும் சில எளிய மருத்துவத்தை பார்க்கலாம்...   

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP