கண்ணே நலமா......?

கண்பார்வைக் கூர்மையாக இருக்க தேவையான உணவையும்,வேண்டிய பயிற்சியையும் செய்தாலே போதுமானது. நமது உடலில் வைட்டமின் ஏ சத்து குறையும் போது கண்ணில் ஈரத்தன்மை குறைந்து சுருக்கம் ஏற்பட்டு வற்றிவிடுகிறது.
 | 

கண்ணே நலமா......?

வருமுன் காப்போம் என்பதற்கேற்ப உடலுக்கு தேவையான அத்தனைச் சத்துக்களையும் சரிவிகித அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஐந்து வயது குழந்தைகள் கூட அசாதாரணமாய் கண்ணாடி அணிந்து இருப்பது இன்று சாதா ரணாமாக எடுத்து கொள்கிறோம். எனது பாட்டி 88 வயதில் கண்ணாடி அணியாமல் தினமும் செய்தித்தாள்களைப் படித்து உலக நடப்பை தெரிந்து கொள்வார். இந்த வயதிலும் எப்படி பாட்டி கண்ணாடி அணியாமல் படிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் வித்தியாசமாக இருந்தது. 

40 வயதைக் கடக்கும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் சாளரம் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படும். அதாவது கண்களில் பூச்சி பறப்பது போல்,  எழுத்துக்களும் சரியாக தெரியாது. படிக்க படிக்க அலைஅலையாய் இருக்கும். அப்போது ஒன்றிலிருந்து இரண்டு வருடங்கள் வரை படிக்காமல், நுண்ணிய வேலைப்பாடுகள் செய்யாமல் மேம்போக்காய் செய்து வந்தால் நாளடைவில் சாளர குறைபாடு நீங்கிவிடும். பிறகு வாழ்நாளின் இறுதிவரை கண் பார்வையில் குறைபாடு இருக்காது என்றார். மேலும் இந்த நேரத்தில் கண் மருத்துவரிடம் சென்று கண்ணாடி அணிந்து படிக்கும் பழக்கத்தை யாரும் கட்டாயமாக்கி கொள்ளவில்லை. அப்போதைக்கு அடுத்தவரிடம் உலக நடப்பைக்கேட்டு தெரிந்து கொள்வார்கள். கண்களில் புரை, வேறு ஏதேனும் பாதிப்பு வந்தால் மட்டும்தான் டாக்டரிடம் செல்வோம் என்றார். யாருக்குமே கண் பார்வை குறைபாடு இல்லையா என்ற சந்தேகத்தைக் கேட்டோம். இருந்தது. 10 பேரில் ஒருவர் கண்ணாடி போடுவதைக் கூட அதிசயமாக பார்ப்போம். இப்போது கண்ணாடி போடாதவர்களைத் தான் அதிசயமாக பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று சலித்துக் கொண்டார். 

கண்ணே நலமா......?

கண்பார்வைக் கூர்மையாக இருக்க தேவையான உணவையும்,வேண்டிய பயிற்சியையும் செய்தாலே போதுமானது. நமது உடலில் வைட்டமின் ஏ சத்து குறையும் போது கண்ணில் ஈரத்தன்மை குறைந்து சுருக்கம்  ஏற்பட்டு வற்றிவிடுகிறது. நாளடைவில்  வெளிச்சம் மங்கலமாக தெரிகிறது. இந்தச் சத்துகுறைபாட்டின் ஆரம்ப நிலைதான் மாலைக்கண் நோய். ஆரம்பத்திலேயே இதை கவனிக்காவிட்டால் கண்பார்வை இழக்க நேரிடும் அபாயமும் உண்டு. இந்த வைட்டமின் ஏ சத்து பால், தயிர், மோர், நெய், கீரைகள், வெண்ணெய், முட்டைக்கரு, மஞ்சள், பூசணி, பீட்ரூட்ம் கேரட் போன்ற சிவப்பு நிறகாய்கறிகளில் அதிகமுள்ளது. கேரட் கண்களின் தோழன் என்று சொல்லலாம். கேரட்டில் ஆன்டி- ஆக்ஸி டென்ட்களான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உடலுக்கு ஆரோக்யம் தருவதோடு கண்களையும் பாதுகாக்கிறது. பரந்திருக்கும் கீரை வகைகளும் கண்ணுக்கு மிகவும் நல்லது. கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்தும் லுடீன் சத்தும் அதிகமிருக்கிறது. இந்தச் சத்துக்கள் கண்கள் ரெட்டினா மற்றும் கண் பார்வையைப் பாதிக்கும் வெளிச்சத்திலிருந்தும் காக்கிறது. 

குறிப்பிட்ட காய்கறிகளை மட்டும் பழக்காமல் அனைத்தையும் சாப்பிட  பழக்குங்கள் என்று சொல்லும் கண் மருத்துவர்கள் கண்களுக்கு தேவையான பயிற்சியை வழங்க சொல்கிறார்கள்.

கண்ணே நலமா......?

அகன்ற கிண்ணத்தில் தூய்மையான நீரை பரப்பி கண்களை மூடாமல் மூழ்க செய்தால் கண்ணிலுள்ள அழுக்குகள் வெளியேறிவிடும். வாரம் ஒருமுறையாவது வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கியோ சோற்றுக்கற்றாழை நுங்கை எடுத்தோ, காட்டனை பன்னீர்ல் நனைத்தோ கண்களை மூடி அதன் மேல் வைத்து 10 நிமிடங்கள் கழித்து எடுங்கள். கண்களில் உள்ள உஷ்ணம் குறையும்.

கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்து பணி செய்யும்போது கண்ணை சிமிட்டாமல் இருப்போம். அதனால் கண்பார்வை பாதிப்பு, கண்ணில் சோர்வு உண்டாகும். அரைமணிநேரத்துக்கு ஒருமுறை உள்ளங்கைகளைத் தேய்த்து கண்களின் மேல் வைத்து எடுக்கலாம். ஓய்வு கிடைக்கும் போது அல்லது உணவு இடைவேளையில் கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவலாம். இவையெல்லாம் சாதாரணமாக  எல்லோராலும் செய்ய முடிந்த எளிய பயிற்சியே.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP