பனிக்கால சரும பராமரிப்புகள்!

குளிர்காலம் துவங்கி விட்டது. இதிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது தான் பலரின் கவலையாக இருக்கும். தேங்காய் எண்ணெய், கற்றாழை, ஆகியவை சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கும். இதோ சில டிப்ஸ் உங்களுக்காக...
 | 

பனிக்கால சரும பராமரிப்புகள்!

குளிர்காலம் துவங்கி விட்டது. இதிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பது தான் பலரின் கவலையாக இருக்கும். இந்த சமயத்தில் சருமத்தின் தன்மையும் மாறும். அதற்கேற்றபடி சில பராமரிப்புகளைப் பின்பற்றினால், முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம்.
சாக்கோ கஃபைன் க்ளோ ஃபேஸ்  மாஸ்க் 

தேங்காய் எண்ணெய்

உடலை தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். பனிக் காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணை தேய்த்துக் குளிக்கலாம்.

மாய்ஸ்சுரைசிங்

இந்த சமயத்தில் சருமம் வறண்டு போகும் என்பதால், குளித்து முடித்ததும் கட்டாயம் மாய்ஸ்சுரைசரை அப்ளை செய்ய வேண்டும்.  

வாழைப்பழ பேக்

வாழைப்பழத்தில் சரும வறட்சியைத் தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது. அதனால் மசித்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் தேன் பயன்படுத்தி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை

சுத்தமான கற்றாழையை 15 நிமிடம் முகத்தில் தடவி பின் கழுவலாம். 

தண்ணீர்

குளிர்காலம் என்பதால் தண்ணீரை தவிர்க்கக் கூடாது. வெயில் காலத்துக்கு சமமாக நிறைய தண்ணீர் குடிக்கவும். இல்லையெனில் சரும வறட்சி அதிகரிக்கும். 

உணவு 

நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக நிறைய சிட்ரெஸ் பழங்களை உட்கொள்ள வேண்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP