சரும வறட்சியா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க...

பொதுவாகவே ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு வகையான சருமத்தை பெற்றிருப்பார்கள். இதில் ட்ரய் ஸ்கின் எனப்படும் வறண்ட சரும பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு சில எளிய டிப்ஸ்கள்.
 | 

சரும வறட்சியா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க...

பொதுவாகவே ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு வகையான சருமத்தை பெற்றிருப்பார்கள். ட்ரய் ஸ்கின்(DRY SKIN) எனப்படும் வறண்ட சருமம், ஆய்லி ஸ்கின்(OILY SKIN) எண்ணைப் பசையுடைய சருமம்,  காம்பினேஷன் ஸ்கின்(COMBINATION SKIN) வறண்டதும், எண்ணைப்பசையுடையதுமான சருமம், நார்மல் ஸ்கின் (NORMAL SKIN) இயல்பான சருமம் என நான்கு வகையான சருமங்களில் ஏதேனும் ஒரு வகை  நமக்கு இருந்து தானே ஆகணும். இதில் ட்ரய் ஸ்கின் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு சில எளிய டிப்ஸ். 

* தினமும் இரவு தூங்க செல்லும்  முன், முகத்தில் பாதாம் எண்ணெய் /ஆலிவ் எண்ணெய்/ தேங்காய் எண்ணெய்  தடவி காலையில் வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி பொலிவுடன் காணப்படும்.

* வாரத்தில் ஒரு நாள் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் சருமத்தில் வறட்சி நீங்கி குளிர்ச்சியாக இருக்கும்.

* நம்முடைய சருமத்தை மிருதுவாக மாற்ற பால் மிகவும் உதவுகிறது. தினமும் பாலை நம்முடைய சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் நம்முடைய சருமம் வறட்சி அடையாமல் இருக்கும்.

* சரும வறட்சியை நீக்க சிறந்த வழி என்பது பேபி லோஷன் தான். ஏனெனில் இதில் அதிக அளவு கெமிக்கல் இருக்காது. எனவே சரும வறட்சிக்கு இது ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்.

* தினமும் குளிக்கும் முன் தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி பொலிவுடன் காணப்படும்.

குறிப்பு: என்ன தான் சரும வறட்சிக்கு கிரீம்களை பயன்படுத்தினாலும்,  நிரந்திர சரும வறட்சியை போக்க உடலுக்கு தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க  வேண்டும். குறைந்தது 8-10 டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் அடிக்கடி செல்பவர்கள் இன்னும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும் பிரச்னைகளை கட்டுக்குள் வைத்திட இயலும்.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP