கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான காரணங்கள் 

வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மேல் நோக்கி வருவதால் நெஞ்செரிச்சல் என்னும் தொந்தரவு தோன்றுகிறது. பொதுவாக இந்த உணர்வு தொண்டையில் மற்றும் மார்புப் பகுதியில் ஒருவித அசௌகரியம் உண்டாக்கும். இதனுடன் சேர்ந்து அமிலச் சுரப்பும் வாயினுள் வருவதனால் ஒருவகை கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வார்கள்.
 | 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான காரணங்கள் 

கருத்தரித்த பெண் உடல் மற்றும் மன ரதியான பல்வேறு தொந்தரவுகள் மற்றும் மாற்றங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்ணின் வயிற்றுப்பகுதில் இருக்கும் கர்ப்ப பையில், கரு தங்கியவுடன் கருப்பை பெரிதாக துவங்கும். அப்போது கருப்பையிற்கு இடமளிக்கு விதமாக, மற்ற உறுப்புகளில் சில மாற்றங்கள் தோன்றும். குறிப்பாக குடற்பாதையில் ஏற்படும் மாற்றங்களால் வாந்தி,குமட்டல் போன்ற உணர்வு தோன்றுகிறது.

வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மேல் நோக்கி வருவதால், நெஞ்செரிச்சல் என்னும் தொந்தரவு தோன்றுகிறது. பொதுவாக இந்த உணர்வு தொண்டையில் மற்றும் மார்புப் பகுதியில், ஒரு வித அசௌகரியம் உண்டாக்கும். இதனுடன் சேர்ந்து அமிலச் சுரப்பும் வாயினுள் வருவதனால் ஒருவகை கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வார்கள். 

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான காரணங்கள் 

கர்ப்பம் தரித்த காலங்களில் போதுமான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மற்றும் கர்ப்பகாலத்தில் சுரக்கும் அதிகப்படியான ஹார்மோன்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்களில் 8% பெண்களுக்கு கடைசி மூன்று மாதங்களில் மூலநோய் தொந்தரவுகளை சந்திக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலசிக்கல், உடல் சூடு அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கல் போன்றவை இந்த தொந்தரவுகளுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான காரணங்கள் 

காலில் ஏற்படும் வீக்கம் பொதுவாக கர்ப்பம் தரித்த பெண்களின் உடலில் ஏற்படும் நீர் மாற்றம் அமரும் போதுமான அளவு நீர்சத்து இன்மை போன்ற காரணங்களால் கால்களில் வீக்கம் ஏற்படும். 

கர்ப்பம் தரித்த பெண்களின் பிறப்புறுப்பில் திரவம் அடிக்கடி வெளியாவது சாதாரண விஷயம் என்றாலும். இந்த திரவத்தில் ஏதேனும் நாற்றம், அந்த பகுதியில் வலி, அரிப்பு போன்றவற்றை உணர்ந்தாலே அது ஏதேனும் தொற்றினால் ஏற்பட்டிருக்கலாம். எனவே உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

முதுகு வலி கர்ப்பம் தரித்த பெரும்பாலான பெண்கள் முதுகு பகுதியில் வலியை சந்திக்கின்றனர். முதுகு பகுதி முன்னோக்கு வளைவதால் இந்த தொந்தரவு ஏற்படலாம். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. மெதுவாக மஜாஸ் செய்வதன் மூலம் இந்த வலியை குறைத்து கொள்ள முடியும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான காரணங்கள் 

இடுப்பு பகுதியில் வலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான தொடை, ஏனைய பகுதிகளிலும் வலி ஏற்படலாம். வலி அதிகமாக இருப்பின் நடப்பதில்  சிரமம் ஏற்படும்.  குழந்தை வெளியேறுவதற்கு ஏதுவாக, இடுப்பு பகுதி தன்னை தானே தயார் செய்வதால் இது போன்ற வலி ஏற்படுகிறது.

கைகளில் விறைப்பு, எரிச்சலுடன் கூடிய வலி, வீக்கம் போன்ற தொந்தரவுகள் தோன்றும். கர்ப்பகாலத்தின் போது நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தால் இவ்வகையான அறிகுறி தோன்றலாம்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP