'சூடாக  டீ, காபி குடிச்சா கேன்சர் வருமா?.

மனிதனின் வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகுவும் மிருதுவாக இருக்கும். சூடான டீ, உணவுக்குழாயின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, சேதமடையும் பகுதியில் கேன்சர் கட்டிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 | 

'சூடாக  டீ, காபி குடிச்சா கேன்சர் வருமா?.


ஒரு நாள் முழுக்க சாப்பிடமல்  கூட இருப்பேன் ஆனால் டீ ,காபி குடிக்காமல் இருக்கவே முடியாது என்கிற அளவுக்கு பலரின் அன்றாட வாழ்க்கையில் கலந்து விட்டது டீ... கிரீன் டீ, இஞ்சி டீ, பிளாக் டீ, மூலிகை டீ என பல ரகங்களில் டீ கிடைக்கிறது.அதேபோல் காபியிலும் பல ரகம்... . 

மேலும் பலரின்  காலைக்கடனை முடிக்க கூட துணை நிற்பது டீயும் , காபியும் தான்...அருமையான டீயை சூடாக குடித்தால் தான் சுவை ஆரியபின் குடிக்க இது கூல்ரிங்கா? என  நாம் கேட்போம் .... இத்தகைய கேள்விகளுக்கு சரியான பதில் இதோ.. 

'சூடாக  டீ, காபி குடிச்சா கேன்சர் வருமா?.
மிகவும் சூடாக டீ , காபி குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக  அமெரிக்க புற்றுநோய் சங்கம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 60 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான சூட்டில் தேநீர் அருந்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோல் நாள் ஒன்றுக்கு 700 எம்.எல் தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவீத அளவிற்கு புற்றுநோய் ஏற்படலாம் என அந்த ஆய்வு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

'சூடாக  டீ, காபி குடிச்சா கேன்சர் வருமா?.

பெரும்பாலானோர் டீயையோ, காபியையோ குடிக்கும் போது அதிகப்படியான சூட்டோடு தான் குடிக்கிறார்கள்.மனிதனின் வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகுவும் மிருதுவாக இருக்கும். சூடான டீ, உணவுக்குழாயின்  சுவர்கள் பாதிக்கப்பட்டு , அந்த திசுக்கள் சேதமடைகின்றன.அவ்வாறு சேதமடையும் பகுதியில் கேன்சர் கட்டிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP