உலக ஆரோக்கிய தினத்தில், வால்நட்ஸ் குறித்த ஒரு பார்வை

வால்நட் கொண்டு தயாரிக்கப்படும் மாவில், நார்ச்சத்து, மக்னீசியம், புரதம் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகளவில் இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய ஊட்டச்சத்தாக இது கருதப்படுகிறது.
 | 

உலக ஆரோக்கிய தினத்தில், வால்நட்ஸ் குறித்த ஒரு பார்வை

உயிர் வாழ்வதற்கு அடைப்படை தேவைகள் உணவு உடை இருப்பிடம் என அனைவருக்கும் தெரியும்.  இத்தகைய அத்தியாவசிய தேவைகள் சுகாதர முறையில் கிடைப்பது அவசியம். வாழ்க்கை ஓட்டத்தில் ஆரோக்கியம் என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது. இன்றைய சூலலில் இயற்கையான முறையில் விளைவித்த உணவு வகைகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவது என்பது மிக கடினமான செயலாகவே தென்படுகிறது. வாழ்க்கையை முன்னேற்றும் ஓட்டத்தில், உடல் ஆரோக்கியத்தை பின்னுக்கு தள்ளிவிட்டோம்.

இன்று (ஏப்ரல் 7) உலக ஆரோக்கிய தினம், இன்று முதல் ஆரோக்கிய உணவு பழக்கத்தை  மேற்கொள்வோம்  என்கிற உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கிய மற்ற உணவு பழக்கம் நம்மை மட்டுமல்ல நமது சந்ததியையும் பாதிக்கும் உயிர் கொல்லி என்பதை உணர்ந்து உணவு மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்வோம்..

 சமீபத்தில், யு.எஸ் டைம்ஸ் மேகஸின் செய்த ஆய்வின் படி   "100 இயற்கை உணவுகள் வயிற்றை முழுமையடைய செய்யும் என உறுதி செய்துள்ளனர்.  அதில் முக்கியமாக கருதப்படுவது கொட்டை வகையை சார்ந்த வால்நட்ஸ்.

உலக ஆரோக்கிய தினத்தில், வால்நட்ஸ் குறித்த ஒரு பார்வை

வால்நட்ஸின் நன்மைகள்:
 
உங்கள் நாக்கிற்கு மட்டும் சுவை தரும் அநேக உணவுகள்  ஆரோக்கிய மற்றவையாக இருக்கக்கூடும். எனவே உடலுக்கு நன்மை  பயக்கும் சுவையுடைய  நார்ச்சத்து, கனிமங்கள் மற்றும் வைட்டமீன்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ள வால்நட் போன்ற உணவுவகைகளை தினசரி உணவு பட்டியலில் சேர்ப்பது உடல் நலத்தை பாதுகாப்பதுடன், வயிறு நிறைந்த திருப்தியையும் கொடுக்கிறது.

தாவரம் சார்ந்த உணவுகள்:

உலக ஆரோக்கிய தினத்தில், வால்நட்ஸ் குறித்த ஒரு பார்வை

 நமது நாளை முழுமையடைய செய்யக்கூடிய சக்தி இயற்கை சார்ந்த உணவு பொருள்களான காய், கீரை, பழங்கள், வால்நட் போன்றவைகளை  தினமும் எடுத்துகொள்வதான் மூலம் உடல் சார்ந்த பிரச்னைகளை பெரும்பாலும் தவிற்கலாம் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.

வால்நட் பால்:

உலக ஆரோக்கிய தினத்தில், வால்நட்ஸ் குறித்த ஒரு பார்வை
 
வால்நட் பால் ஓட்ஸ் போன்றவை குடல் நுண்ணுயிர்களில்  நேர்மறையான மாற்றங்களுக்கு உதவுகின்றன.  இதன்  மூலம் உங்கள் குடலில் ஆரோக்கியம்  மேம்படுகிறது. 

புரத சத்துள்ள மாவு வகைகள்:

உலக ஆரோக்கிய தினத்தில், வால்நட்ஸ் குறித்த ஒரு பார்வை

வால்நட் கொண்டு தயாரிக்கப்படும் மாவில்,  நார்ச்சத்து, மக்னீசியம், புரதம் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஒமேகா-3  கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகளவில் இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய ஊட்டச்சத்தாக இது கருதப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP