100% ஆரோக்யம் தரும் ‘நல்ல’ எண்ணெய் நல்லெண்ணெய் தான் !

நல்லெண்ணெய் ஆரோக்யம் அளிப்பதில் நல்ல எண்ணெய் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. செசாமின் என்னும் பொருள் நல்லெண்ணெயில் இருக்கிறது.
 | 

100% ஆரோக்யம் தரும் ‘நல்ல’ எண்ணெய் நல்லெண்ணெய் தான் !

ஹார்ட் அட்டாக்... வருவதற்கு கொழுப்பு அதிகளவில் உடலில் தங்குவதே காரணம் இது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்று. கொழுப்புக்கும் நாம் உபயோகப்படுத்துக்கு எண்ணெய்க்கும் அதிக தொடர்பு உண்டு... 30 வயதிலும்  ஹார்ட் அட்டாக் வருவதை அச்சத்துடன் பார்த்து கடக்கிறோம்...  அதைவிட மூன்று மடங்கு வயதில் 90 வயதிலும்  திடகாத்திரனாய்  வளைய வந்த சந்ததி யில் இருந்து உருவானவர்கள் தான் நாம் என்பதை மறந்துவிட்டோம்..

எல்லா விஷயங்களுக்கும் முடிவு ஒன்று உண்டு என்பது போலவே உணவு மாற்றத்திலும் விழிப்புணர்வு  உருவாகிக்கொண்டிருக்கிறது.  வேர்க்கடலை என்று சொல்லப்படும் நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெ யும், கறுப்பு எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்ல எண்ணெயும், அரிசி தவிட்டிலி ருந்து பெறப்பட்ட தவிட்டு எண்ணெயும், தேங்காயிலிருந்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெயும் தான் நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்தார்கள்.  இவை எல்லாமே உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து நல்ல கொழுப்புகளை உடலுக்குச் சேர்க்க கூடியவை என்பதை அறிந்திருந்தார்கள்.

குறிப்பாக நல்லெண்ணெய்  ஆரோக்யம் அளிப்பதில் நல்ல எண்ணெய் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. செசாமின் என்னும் பொருள் நல்லெண்ணெயில் இருக்கிறது.  மேலும் வைட்டமின் ஈ,  கொழுப்பைக் குறைக்கும் லெக்சிதன் என்னும் பொருளும்  இதில் அடங்கியிருக்கிறது. அதனால் உடலில் சேரும் அதி கப்படியானகெட்டகொழுப்பைக் குறைக்கிறது.இரத்தக்குழாய்களிலும் கொழுப்பை சேரவிடாமல் தடுத்து, இதய நோய்கள் நம்மை நெருங்குவதை தடுக்கும் அபரிமிதமான சக்தியாக நல்லெண்ணேய் செயல்படுகிறது.  

இளமையும்,  தோற்றப்பொலிவும் நீடித்து நிற்க நல்லெண்ணெய் பெரிதும் துணை புரிகிறது.  மன உளைச்சல், கவலை, பதற்றம் போன்றவற்றை அதிகரிக்கக்கூடிய ஹார்மோன் சுரப்புகளைத் தடைசெய்யும்  பைரோ ரெஸினால் என்னும் அமிலப் பொருளை உள்ளடக்கியிருக்கிறது. உடலுக்கு நல்லெண்ணெய் சேரும்போது உடலில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ் உப்புகள் எளிதில் செரிமானம் ஆக துணைபுரிகிறது. இப்படியெல்லாம் ஆரோக்யத்தைத்தேடி போகாமல்  வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள்.

மாரடைப்பு உண்டாக்குகிறது  என்று தேங்காய் எண்ணெயையும், இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும்  என்று  நல்லெண்ணையையும் பயன்படுத்தவிடாமல்  மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி  சூரியகாந்தி எண்ணெயைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது சூரிய காந்தி எண்ணெய் என்ற பெயரில் கிடைக்கும் அனைத்து எண்ணைய்களும் சூரிய காந்தி பூக்களில் இருந்து மட்டுமே பெறப்பட்ட எண்ணெய் அல்ல என்பதே உண்மை...  அநேக எண்ணெய்கள் தரமற்ற முறை யில்  கேடு விளைவிக்கும் எண்ணெய்கள்  கலந்தே விற்பனைக்கு வருகின்றன.

கறுப்பு எள்ளை வாங்கி கல் நீக்கி 20 கிலோ எள்ளுக்கு 4 கிலோ பனங்கருப்பட்டி சேர்த்து மிஷினில் ஆட்டி பயன்படுத்துங்கள்.. சற்றே கசப்போடு கூடிய தரமான நல்லெண்ணெய் நல்ல எண்ணெயாக  உடல் ஆரோக்யத்துக்கும் சரும மினு மினுப்புக்கும் நூறு சதவீத பலனைக் கொடுக்கும். 

நலமாய் வாழ நல்லெண்ணெய்க்கு மாறுங்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP