1. Home
  2. ஆரோக்கியம்

இந்த குளிருக்கு இதமா மட்டன் சூப் செஞ்சு குடியுங்க…!

1

இந்த குளிர் காலத்தை இன்னும் ஸ்பெஷல் ஆக்க வேண்டும் இந்த மட்டன் பாயா சூப்பை ட்ரை பண்ணிப் பாருங்க.இந்த பாயா சூப் என்று சொல்லப்படும் எலும்பு குழம்பு, நம் உடலிலுள்ள எலும்புகளை வலுவாக்கும்,குறிப்பாக குளிர் காலங்களில் ஏற்படும் மூட்டு வலிக்கு நல்ல பலனைத்தரும். 

முதல்பாயா பிறந்த கதை:

மட்டன் பாயா சூப் இந்திய துணை கண்டத்தில் ஒரு பாரம்பரிய உணவாகும்! பாயா என்றால் ஹிந்தி மற்றும் உருதுமொழிகளில் கால்கள் என்று அர்த்தம். இதனை மாடு அல்லது ஆடு இவற்றின்  கால்களை வைத்து செய்யப்படும் ஒரு உணவு ஐட்டம் .இந்த இரண்டில் எதை பயன் படுத்தலாம் என்பது உங்கள் விருப்பம் . இந்த பாயா உணவு தெற்கு மற்றும் மத்திய ஆசிய உணவு வகைகளின் கலவையிலிருந்து உருவானது! மத்திய ஆசியாவில் இதனை ‘பச்சா’ என்று கூறுகின்றனர். லாகூர்,தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மற்றும் லக்னோவின் இஸ்லாமிய சமையல்காரர்களால் இந்த செய்முறையை தழுவியதால் இந்த பாயா உணவு உள்ளூர் உணவுகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. 

மட்டன் எலும்பு சூப் :

தேவையானவை 

ஆட்டு எலும்பு - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

வெங்காயம் - 1/4

பச்சை மிளகாய் - 2

அரைக்க தேவையானவை :

இஞ்சி - 10 கிராம்,

பூண்டு - 10 கிராம்,

மிளகு தூள் - 2 தேக்கரண்டி,

ரொட்டித்தூள் - சிறிதளவு,

எலுமிச்சம்பழம் - பாதி,

சீரகதூள் - 2 ஸ்பூன்,

தனியாதூள் - 2 ஸ்பூன்,

கொத்தமல்லி இலை - 1/2 கட்டு,

நெய் - 50 கிராம்,

சர்க்கரை - 1/2 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

முதலில் தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிற மானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்த மல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

பின்னர் தேவைக் கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி சேர்த்து சூப்பை இறக்கவும். அதன் பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்த்து இறக்கினால் மட்டன் எலும்பு சூப் ரெடி.

Trending News

Latest News

You May Like