1. Home
  2. ஆரோக்கியம்

சீரகத் தண்ணீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் தெரியுமா ?

1

உடல் எடையை குறைப்பதில் சீரகத் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. காரணம் சீரக தண்ணீரில் கலோரிகள் மிகக் குறைவு. ஒரு டீஸ்பூன் ஜீரகத்தில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே நீங்கள் இந்த சீரகத் தண்ணீரை குடித்தால் உங்கள் தினசரி கலோரி அளவை பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

ஆன்டி ஆக்சிடென்ட்
ஜீரகத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிக அளவில் உள்ளது. இது உங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் ரேடிக்கல்களை அகற்ற உதவும். மேலும் வைட்டமின்கள் ஏ, சி, காப்பர் மற்றும் மாங்கனீசு அதிக அளவில் உள்ளது.

உடல் பருமனை தடுக்கிறது
ஜீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளது. உடலில் ஏற்படக்கூடிய இன்ப்பிளமேஷன் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். சீரகத் தண்ணீர் குடிப்பது இந்த வீக்கத்தை தடுக்க உதவும். இதனால் உங்கள் உடல் எடையும் குறையும்.

செரிமானத்தை மேம்படுத்தும்
சீரகத் தண்ணீர் உங்கள் உடலில் உள்ள செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மேலும் குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் உடலில் உள்ள சர்க்கரைகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்க உதவும் என்சைம்ககளை அதிகம் சுரக்க உதவுகிறது. உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.

பசியை குறைக்கும்
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது அதிக பசி எடுப்பதும் தேவையில்லாத உணவுகளை சாப்பிட விரும்புவதும் இயற்கை. சீரகத் தண்ணீர் அப்படி ஏற்படும் ருசியைத் தூண்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஆசையை குறைத்து பசியை அடக்க உதவுகிறது. ஒரு கப் சீரகத் தண்ணீரை குடிப்பது உங்களை நீண்ட நேரத்திற்கு பசியில்லாமல் வைத்திருக்கும்.

நச்சுத்தன்மையை நீக்கும்
சீரகத் தண்ணீர் உங்கள் உடலில் உள்ள எல்லா நச்சு தன்மைகளையும் குறைக்கிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. உங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது இது அவசியமான ஒன்று.

ஜீரக தண்ணீரை எப்பொழுது குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்
உங்கள் உடல் எடை குறைப்பு செயல்முறையை துரிதப்படுத்துவதற்கு சீரகத் தண்ணீரை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்க முயற்சி செய்யுங்கள். முதலில் வெறும் வயிற்றில் காலையில் ஒரு கப் குடிக்க வேண்டும். அதன் பிறகு மதிய உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இரண்டாவது கப் தண்ணீரை குடிக்க வேண்டும். இரவு உணவுக்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து மூன்றாவது கப் சீரகத் தண்ணீரை குடிக்க வேண்டும்.

பக்க விளைவுகள்
சீரகத் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அது அதிகமாக உட்கொள்வது ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதை மிதமாக உட்கொள்வது முக்கியம். நெஞ்செரிச்சல், பெண்களுக்கு அதிக மாதவிடாய், இரத்தப்போக்கு மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை ஆகியவை சீரகத் தண்ணீரை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும். உடல்நல பிரச்சினைகள் இருப்பவர்கள் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து விட்டு சீரகத் தண்ணீர் குடிப்பது நல்லது.

Trending News

Latest News

You May Like