1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? அல்சரை போக்கும் அருமருந்து ஆட்டுக்குடலில் உள்ளது...

1

ஆட்டுக்கறி மிகவும் சத்தானது மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். ஆட்டின் அனைத்து உள்ளுறுப்புக்களையும் சமைத்து சாப்பிடுவதுண்டு. அதுவும் ஆட்டு குடலை வறுவல், குழம்பு செய்து சாப்பிட பலரும் விரும்புவர். ஆட்டு குடலில் இரும்புச்சத்து, மக்னீசியம், செலினியம், ஜிங்க் போன்ற கனிமச்சத்துக்களும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகமாக உள்ளன. 

முக்கியமாக ஆட்டு இறைச்சிகளில் புரோட்டீன் தான் வளமான அளவில் இருக்கும். விலங்குகளின் புரோட்டீன்களானது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து 9 வகையான அத்தியாவசிய அமினோஅமிலங்களும் உள்ளன. இப்போது ஆட்டு குடலை வாரம் ஒருமுறை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

  • பொதுவாக வயிற்று வலி, குடல் புண் உள்ளவர்கள் ஆட்டுக்குடல் சாப்பிடுவது நல்லது. அவர்களுக்கு இப்படி ஒரு ஆட்டு குடல் வறுவலை செய்து தரலாம். 
  • எப்படி உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியமானதோ, அதேப் போல் ஜிங்க் சத்தும் மிகவும் இன்றியமையாதது. ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், அதற்கு ஜிங்க் சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஜிங்க் ஆட்டு குடலில் அதிகமாக உள்ளது. 1/2 கப் ஆட்டு குடலில் 1.6 மில்லிகிராம் ஜிங்க் உள்ளது.
  • ஆட்டு குடல் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆட்டு குடலில் உள்ள ஜெலட்டின் மற்றும் புரோபயோடிக்குகள் செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. முக்கியமாக ஆட்டு குடலை உட்கொண்டால், வயிற்றில் புண் இருந்தாலும் அது சரியாகும்.
  • 1/2 கப் ஆட்டு குடலில் 1.57 மிகி வைட்டமின் பி12 உள்ளது. இது ஒரு நாளைக்கு வேண்டிய அளவுகளில் சுமார் 65 சதவீதம் அடங்கும். வைட்டமின் பி12 சருமம், தலைமுடி, கண்கள், கல்லீரல் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. கூடுதலாக வைட்டமின் பி12 மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் டிஎன்ஏ உற்பத்திக்கும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவி புரிகிறது.
  • குடல் இறைச்சி புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது.
  • மியூசின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் குடல் தொடர்பான கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது.
  • ஆட்டுக்குடலை சாப்பிட்டால் அதிலிருக்கும் துத்த நாகத்தின் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கிறது.
  • குடல் இறைச்சி கோலினின் நல்ல மூலமாகும், இது மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் செயல்திறனை பராமரிக்க ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.
  • குடல் இறைச்சிகளில் கிரியேட்டின் உள்ளது, இது தசை செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதற்கும் அறியப்படுகிறது.    

ஒரு கிலோ அளவு ஆட்டு குடலை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் சோம்பு பவுடரையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை வெட்டி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் நன்றாக பழுத்த தக்காளி பழத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின் நன்றாக கழுவிய குடலை சேர்க்க வேண்டும். 

குடலை நன்றாக பிரட்டி விட்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் துள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூளை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் தேவையான உப்பை சேர்த்து பிரட்டி விட வேண்டும். இதையடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குடலை நன்றாக வேக விட வேண்டும். குடல் வெந்து வரும்போது லேசாக உப்பு காரம் ருசித்து பார்த்து கொள்ள வேண்டும். 

கடைசியாக இறக்கும் போது ஒரு ஸ்பூன் மிளகு பவுடர், ஒரு ஸ்பூன் சீரக பவுடர் சேர்த்து நன்றாக சுருட்ட வேண்டும். குடல் வறுவல் தயாரானவுடன் அதில் கொத்த மல்லி இலைகளை சேர்த்து இறக்கி விடலாம். சுவையான ஆட்டுக்குடல் வறுவல் தயார்.

 

Trending News

Latest News

You May Like