இது தெரியுமா ? இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும்..!
ரத்த அழுத்தம் என்றாலே, "உப்பு" தான் நம் கண்முன்னே வந்து நிற்கும் பொருளாகும்.. உப்பு மட்டுமில்லாமல் சர்க்கரையும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது என்பதை பலரும் அறிவதில்லை.. அதிகபடியாக சர்க்கரையே பலவித நோய்களுக்கும் காரணமாகிவிடுகின்றன. எனவே, தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்களில் மிக முக்கியமானது உப்பு, சர்க்கரையாகும்.
கீரைகளில், ரத்த அழுத்தத்திற்கு பேருதவி புரிவது சுக்கான் கீரையாகும்.. இந்த கீரையின் அருமை தெரியாததால், சமையலில் அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதில்லை..
சுக்கான் கீரை சட்னி செய்தும் சாப்பிடலாம். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம். இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து.
சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும். சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும்.
இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.
முருங்கைக்கீரை: முருங்கைக்கீரைகள் ரத்த அழுத்தத்தை சீராக்குகின்றன.. ரத்த அழுத்தம் குறைந்தாலும் சரி, ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சரி, இரண்டிற்குமே இந்த முருங்கைக்கீரை பயன்படும்.. முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டாலே, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். அதேபோல, அரைக்கீரையும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த கீரையை சுத்தம் செய்து கழுவி, அதிலிருந்து சாறு எடுத்து, அதில் சீரகத்தை ஊற வைத்து, காயவைத்து தூளாக்கி, தினமும் 2 வேளைக்கு, 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால், ரத்த அழுத்தம் சீராகும்.. ரத்த அழுத்த நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது அகத்திக்கீரை..
எனவே, சுக்கான் கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை போன்றவைகளை உணவில் சேர்த்து கொண்டாலே, ரத்த அழுத்த பிரச்சனை நீங்கிவிடும்.