இது தெரியுமா ? ஊறவைத்த பாசிப்பருப்பை தினமும் சாப்பிடுவதால்...

பலரும் அறியாத அப்படியொரு அசத்தலான சூப்பர்ஃபுட்தான் பாசிப்பருப்பு.இதைத் தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றியவுடன், உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக மாற்றும். ஆனால், தினமும் பாசிப்பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு என்ன நேரும்?
“தினமும் ஊறவைத்த பாசிப்பருப்பை உட்கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இது செரிமானத்திற்கு உதவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது” என்று ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் தீபலட்சுமி கூறுகிறார். இதில் இரும்பு, மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் வைட்டமின்கள் பி, ஏ, சி மற்றும் நிறைய நார்ச்சத்து உள்ளது.
ஊறவைத்த பாசிப்பருப்பு புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது. “பாசிப்பருப்பை ஊறவைப்பதால் அதில் உள்ள பைடிக் அமிலம் உடைந்து, இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை உடல் நன்றாக உறிஞ்சுகிறது. இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல சிற்றுண்டியாக இருக்கும்” எனத் தீபலட்சுமி கூறுகிறார்.
0