இது தெரியுமா ? இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால்...
வெந்தயம்
உடல்நலத்திற்கு தேவைப்படும் சிகிச்சைமுறை பண்புகளை மிகச்சிறப்பாக கொண்டுள்ளது வெந்தயம். இந்த வெந்தயமானது செரிமானம், சுவாச கோளாறு, நரம்பு மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சீர்படுத்த பெரிதும் பயன்படுகிறது, மேலும் தோல்களை தூய்மைபடுத்துகிறது. எடைக்குறைப்புக்கு மிக எளிய முறையில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இந்திய சமையலில் வெந்தயத்தை வாசனைப்பொருளாகவும் பயன்படுத்துவார்கள்.
கொத்தமல்லி
உண்மையாகவே சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர்வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.. ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சனையை தவிர்த்து சுவாச பிரச்சனைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாகுவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரிசெய்கிறது.. பித்தம் அதிகமாகி பித்த வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.
இஞ்சி
பெரும்பாலோனர் வீட்டில் இஞ்சி இல்லா சமையலை காண்பது அரிது. சமையலறையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நறுமணப்பொருள் இஞ்சி. இது உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பயன்படுகிறது. பிரபஞ்ச மருந்து என அழைக்கப்படும் இஞ்சியானது கபம் மற்றும் வாதம் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய மூச்சு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. காய்கறிகள் மற்றும் பயறுகள் உட்கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய உற்சாகத்தை, நறுமணப்பொருளான இஞ்சி நமக்கு தருகிறது. மேலும் ஜலதோஷம், இருமலை குணப்படுத்தக்கூடிய மூலிகை தேநீராகவும் பயன்படுத்தபடுகிறது.
சீரகம்
இது பெரும்பாலும் சுவையை கூட்டுவதற்காக ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் நறுமணப்பொருளாக உள்ளது. இது செரிமான கோளாறை போக்கி கிருமிநாசினியின் தூண்டியாக செயல்படுகிறது. அதாவது உடலில் திரட்டப்பட்ட நச்சுகளை சுத்தப்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளியாகும் சிறந்த சத்துக்களை உறிஞ்சி நமது உடலை பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது.
மஞ்சள்
இந்தியாவைப் பொறுத்தவரை மஞ்சள் மங்கள அடையாளம். எந்தவொரு நல்ல நிகழ்விலும் மஞ்சளுக்குத்தான் முதலிடம். -இந்தியாவின் குங்குமப்பூ என்று மஞ்சளை குறிப்பிடுகிறார்கள். கசப்பை கட்டுபடுத்தக்கூடிய காரமான வாசனை கொண்ட மஞ்சள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்கு உண்டு. -டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து. மஞ்சளானது இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடம்பில் எந்த இடத்தில் புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து விரைவில் ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் மருந்தாகும். நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது