Logo

இரவு நேரங்களில் சாப்பிடவேக்கூடாத உணவுகள் 

உணவே மருந்து என்று வாழ்ந்திருந்த நமது வாழ்க்கையில் மேற்கத்திய உணவுப் பழக்கம் என்று அறிமுகமானதோ அன்றிலிருந்து அஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் என்று மருத்துவமனை நோக்கி நம்மை அலைய வைத்திருக்கிறது.
 | 

இரவு நேரங்களில் சாப்பிடவேக்கூடாத உணவுகள் 

உணவே மருந்து என்று வாழ்ந்திருந்த நமது வாழ்க்கையில் மேற்கத்திய உணவுப் பழக்கம் என்று அறிமுகமானதோ அன்றிலிருந்து அஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் என்று மருத்துவமனை நோக்கி நம்மை அலைய வைத்திருக்கிறது.

நமது உடலுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு கலோரிதான் தேவைப்படுகிறது. அதே மாதிரிதான் பிற சத்துகளும் அதை விட அதிகமாக உடலுக்கு நாம் கொடுக்கும் பொழுது நமது உடல் செய்வதறியாது திகைக்கிறது. ஒன்று கழிவாக வெளியேற்றி விடுகிறது. அல்லது குப்பையாக உடலில் சேமித்து வைத்து விடுகிறது. இந்தக் குப்பையால் தான் வாயுத் தொல்லை உள்ளிட்ட வயிறுச் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன.

இரவு நேரங்களில் சாப்பிடவேக்கூடாத உணவுகள் 

காலையில் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். மதிய உணவை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேர உணவைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இரவு நேர உணவை மட்டுமே பெரும்பாலோனரால் நிம்மதியாக சாப்பிட முடிகிறது. அதனால் தனக்கு பிடித்தமான உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இரவு நேர உணவுகளில் கலோரி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் வாயுத்தொல்லை, அசிட்டிக், மலச்சிக்கல் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. எந்தெந்த உணவுகளை இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இரவு நேரங்களில் சாப்பிடவேக்கூடாத உணவுகள் 

இரவு 9 மணிக்கு பால் சார்ந்த உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அப்படி மீறி பால் அருந்தும் போது உங்கள் தூக்கத்தை அது கெடுத்துவிடும். 
இனிப்பான உணவுகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.

செரிமானத்திற்கு வாழைப்பழம் நல்லது தான். ஆனால் 1 அல்லது 2 வாழைப்பழங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது. கீரைப் போன்ற உணவுகள் அதிக கலோரிகளைக் கொண்டது. எனவே அது செரிப்பதற்கான நேரம் மற்ற உணவுகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும். இரவு நேரங்களில் உணவு உண்டப் பிறகு நேராக தூங்கச் செல்வதால் கீரை அவ்வளவு எளிதாக செரிக்காது.

இரவு நேரங்களில் சாப்பிடவேக்கூடாத உணவுகள் 

கீரைக்கு அடுத்தப்படியாக இறைச்சி உணவுகள் செரிமான ஆவதற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் காலையில் மலச்சிக்கலும், வாயுத்தொல்லையும் ஏற்படும். மேலும் துரித உணவுகளான நூடுல்ஸ், மேகி, பாஸ்தா, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்டவற்றை நிச்சயம் இரவு நேரங்களில் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது  தவறானதாகும். அதே போல் நீர்ச்சத்து அதிகமாக உள்ள பூசணி, புடலை, சுரக்காய், பாகற்காய், தர்பூசணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP