பிரச்சினைகள் வர வீட்டில் இருக்கும் இந்த செடியும் ஒரு காரணமாக இருக்கலாம்!

பிரச்சினைகள் வர வீட்டில் இருக்கும் இந்த செடியும் ஒரு காரணமாக இருக்கலாம்!

பிரச்சினைகள் வர வீட்டில் இருக்கும் இந்த செடியும் ஒரு காரணமாக இருக்கலாம்!
X

ஒரு சில செடி வகைகளை நாம் வளர்த்து வரும் பொழுது ஒற்றையாக அதை மட்டும் தனியாக வளர்க்கக் கூடாது என்கிற சாஸ்திரங்கள் உண்டு. அதாவது அந்த ஒரு செடியை மட்டும் வளர்க்கக்கூடாது! அதனுடன் சேர்த்து வேறு ஒரு செடியையும் வளர்க்க வேண்டும் என்கிற நியதி இருக்கும். இதை தெரியாமல் சிலர் ஒற்றைச் செடியாக வளர்ப்பதால் அவர்களுடைய வீட்டில் பிரச்சினைகள், தம்பதியர் ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. அப்படி எந்த செடிகளை தனியாக வளர்க்கக் கூடாது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

உதாரணத்திற்கு வெற்றிலை செடியை எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையை தனியாக எப்போதும் வளர்க்கக் கூடாது. வெற்றிலையை ஆண் செடியாக விருட்ச சாஸ்திரம் கூறுவதால்! அதனுடன் சேர்த்து வேறு ஒரு செடியையும் வளர்க்க வேண்டும். வெறும் வெற்றிலை செடியை மட்டும் ஒரு வீட்டில் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் நிச்சயம் தம்பதியர் ஒற்றுமை குறைவாக இருக்கும். அது போல் அவர்களுடைய வம்சம் விருத்தி பெறுவதில் சிக்கல்கள் உண்டாகும்.

இந்த வகையில் தான் கறிவேப்பிலைச் செடி மற்றும் பப்பாளி செடி அமைந்துள்ளது. இந்த இரண்டு செடி வகைகளில் ஒரு செடியை மட்டும் தனியாக வளர்ப்பது அவ்வளவு நல்லது அல்ல என்கிறது விருட்ச சாஸ்திரம். கறிவேப்பிலைச் செடியை மட்டும் நீங்கள் வளர்த்தால் அந்த வீட்டில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் அமைந்துவிடும். அதே போல் தான் பப்பாளி செடியை மட்டும் தனியாக நீங்கள் வளர்த்தால் குடும்பத்தில் தேவையில்லாத சிக்கல்களும், சண்டை, சச்சரவுகளும் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

1

கறிவேப்பிலை மிகவும் மகிமை வாய்ந்த செடி. இந்த செடியை தாராளமாக வீட்டில் சிறிய இடம் இருந்தால் கூட நாம் வளர்த்து விடலாம். அது எந்த அளவிற்கு செழித்து பச்சை பசேலென வளர்கிறதோ! அந்த அளவிற்கு உங்களுடைய வீடும் சுபீட்சம் பெறும். அவ்வளவு சிறப்புகள் தன்னுள்ளே அடக்கியுள்ள கறிவேப்பிலைச் செடி தனியாக இருப்பது நல்லதல்ல.

பப்பாளி மரத்தை அது போல் தனியாக வளர்க்கக்கூடாது. இரண்டு செடிகளையும் ஒன்றாக சேர்த்து வளர்க்க வேண்டும். அதாவது உங்கள் வீட்டில் பப்பாளி செடி இருந்தால்! கறிவேப்பிலைச் செடியும் இருக்க வேண்டும் என்று விருட்ச சாஸ்திரம் கூறியுள்ளது. அது போல் கறிவேப்பிலைச் செடி வைத்து இருந்தால்! பப்பாளி செடியும் உடன் வைத்து விடுங்கள். பப்பாளி செடி பெரும்பாலும் சில செடிகள் வாங்கி வந்து வளர்ப்பதால் அவைகள் காய்கள் காய்ப்பதில்லை. நன்கு காய்க்கின்ற செடியாக பார்த்து வாங்குவது மிகவும் நல்லது. இரண்டும் ஒரு வீட்டில் ஒன்றாக இருப்பதால் அந்த வீடு கணவன் மனைவி பிரச்சனை இல்லாமல் அவர்களுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

இப்போது பல வீடுகளில் கணவன் மனைவி பிரச்சினை அதிகரித்து வருகிறது. சதா சண்டை, சச்சரவு என்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இறுதியில் விவாகரத்து செய்யும் படியான நிலையில் வந்து விடுகின்றனர். இது போன்ற நிலையில் இருப்பவர்கள் உங்கள் வீட்டில் பப்பாளி செடியையும், கறிவேப்பிலையையும் வாங்கி வளர்த்து வாருங்கள். அவைகள் வளர வளர உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

Next Story
Share it