1. Home
  2. ஆரோக்கியம்

சம்மரை ஜாலியாக்கும் ஹெல்த்தி பியூட்டி டிப்ஸ்..!!



ஒரு நிமிடத்தில் ஆம்லெட்டாகும் அளவுக்கு வெயில் தாக்கிக்கொண்டிருக்கிறது. இது வெறும் டீசர் தான், மெயின் பிக்சர் மே மாதத்தில் தான் வரும் என்ற அளவிற்கு பாடாய் படுத்தி வருகிறது. நமது உடலுக்கு எப்படி கடும் குளிர் ஆகாதோ, அதேப்போல் கடும் வெயிலும் ஆகாது. அதனால் முடிந்தளவு உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு சில டிப்ஸ்...

  • சம்மரில் முகம் இன்னும் அதிகமாக எண்ணெய் பசையாக இருக்கும். அதனால் சோப்பைத் தவிர்த்து, நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்தலாம். இரண்டு வேளை ஃபேஸ் வாஷ் பயன்படுத்திவிட்டு, மற்ற நேரங்களில் முகத்தை வெறும் தண்ணீரால் கழுவுங்கள்.
  • முகத்திற்கு ரோஸ் வாட்டர் ஸ்பிரே செய்யலாம். இது முகத்தை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
  • நிறைய தண்ணீர் குடியுங்கள், அதோடு இளநீர், மோர், பானகம், பதநீர் ஆகியவற்றையும் நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். ஜூஸில் பால், சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் குடிப்பது நல்லது. இது உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, முகத்தையும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.
  • நிறைய பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி, ஆகியவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.
  • காட்டன் உடைகளைப் பயன்படுத்துங்கள், சம்மருக்கு இதைவிட சிறந்த உடை வேறு எதுவாகவும் இருக்க முடியாது. ரொம்ப டைட்டான உடையை மூட்டைக் கட்டிவிட்டு, லூஸான உடையை அணியுங்கள்.
  • வெயிலில் செல்வதற்கு 15-30 முன்பு சன்ஸ்கிரினை அப்ளை செய்யுங்கள். முழுநேரமும் வெளியில் இருப்பவர்கள், எஸ்.பி.எஃபைப் பொருத்து முகத்தை கழுவி விட்டு மீண்டும் ரீ அப்ளை செய்யுங்கள்.
  • வீட்டிலேயே ஸ்கின் டேனிங்கை சரிசெய்ய, கடலை மாவு, பால் பவுடர் தலா ஒரு டீ ஸ்பூன், தேன், எலுமிச்சை ஜூஸ் தலா அரை டீஸ்பூன், பால் இரண்டு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். பாலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து, முகத்தில் அப்ளை செய்து, அந்த மாஸ்க்கை காய விடாமல், பாலை அதன் மேல் அப்ளை செய்யவும். பிறகு 20 நிமிடம் கழித்து நார்மல் வாட்டரில் முகத்தைக் கழுவவும். இது இயற்கையான முறையில் கருமையைப் போக்கும். இதனை வாரம் ஒருமுறை தொடர்ந்துப் பயன்படுத்த, கருமை காணாமல் போகும்.

Trending News

Latest News

You May Like