1. Home
  2. ஆரோக்கியம்

8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்..!!

8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்..!!

நாள் முழுவதும் கடினமாக உழைத்தபின், உடலுக்கு ஓய்வு கொடுக்க நல்ல தூக்கம் அவசியம். முழுமையான நல்ல தூக்கத்தை அனுபவித்தால், அடுத்த நாள் காலையில் உங்கள் மனநிலை புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் அன்றய நாளில் மன நிம்மதியுடன் உற்சாகமாக வேலை செய்ய முடியும். இதனால் உங்கள் உற்பத்தி திறனும் சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் மிகவும் முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், பதில் தெரியாத பல கேள்விகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்த பதிவில், ஒரு சராசரி மனிதனுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை தெரிந்துகொள்வோம். மேலும் மிகக் குறைவான நேரம் தூங்குவது அல்லது அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பார்க்கவிருக்கிறோம்.

நல்ல தூக்கம் என்றால் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று பலர் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மையா? ஆரோக்கியமான இளைஞர்களுக்கு 7-9 மணிநேர தூக்கம் போதுமானது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையான தூக்கத்தின் அளவு வயதுக்கு ஏற்ப மாறுபடும்.

  • புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 14-17 மணி நேரம் தூங்குகிறது, இது குழந்தைக்கு தேவையானது. வளரும் குழந்தைக்கு 11-14 மணி நேர தூக்கம் போதுமானது.
  • பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் டீன் ஏஜ் குழந்தைகள் வரை 10-13, 9-11 மற்றும் 8-10 மணி நேர தூக்கம் அவசியம்.
  • அதே சமயம் பெரியவர்கள் 7-9 மணி நேரம் தூங்க வேண்டும், வயதானவர்கள் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.

நம்மில் பலரும் உடலுக்குத் தேவையானதை விட அதிக நேரம் தூங்குகிறோம். இதனால் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்று எண்ணுவது தவறானது. சராசரியாகத் தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, குறைவான நேரம் தூங்குபவர்களுக்கு 27% மற்றும் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு 21% உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதகரிக்கிறது.



நீங்கள் குறைவான நேரம் மட்டுமே தூங்குகிறீர்களா?, உங்கள் உடலுக்குக் குறைவான தூக்கம் போதும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடலைக் குறைவான தூக்கத்திற்கு பழக்கப்படுத்த முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானது. இது சாத்தியமில்லை என்று மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கை கூறுகிறது. சில ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, 6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் உள்ள ஒருவர் செயலாற்றுவது மிகவும் அரிது. இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.



Trending News

Latest News

You May Like