இந்த காய்கறிகளை தெரிஞ்சும் சாப்பிடாதீங்க..!!

இந்த காய்கறிகளை தெரிஞ்சும் சாப்பிடாதீங்க..!!
X

ஒவ்வொரு காய்கறிகளும் நம் உடலுக்கு தேவையான ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. பல நன்மைகளை கொடுக்கக்கூடிய இந்த காய்கறிகள் சிலருக்கு சில நேரங்களில் சாப்பிடக்கூடாது. அப்படி யார் யாரெல்லாம் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம் சாப்பிட கூடாது தெரியுமா ?

பூசணிக்காய்

இதில் புரதம், கொழுப்பு சத்து உள்ளது. பூசணிக்காயை, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது. இது குழந்தைகளுக்கும் மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது. இது நரம்புகளுக்கு வலுவூட்டும், வயிற்றுப் புண்களை ஆற்றும், உடல் எடையைக் அதிகரிக்கும். வெண்பூசணி மிகவும் நல்லது.

முருங்கைக்காய்

முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளது. இது நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும். குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும். முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பாகற்காய்

பாகற்காயில் பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அலோபதி மருந்துகள் சாப்பிடும் போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும்.மேலும் அடிக்கடி இதை சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். இது தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

வெள்ரிக்காய்

இதில் விட்டமின் ஏ, பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். ஆஸ்துமா நோயாளிகள் வெள்ளரிக்காயை சாப்பிட கூடாது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

கத்தரிக்காய்

கத்தரிக்காயில் விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. இது நரம்புகளுக்கு வலுவூட்டும் மற்றும் சளி, இருமலைக் குறைக்கும். ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும். ஆனால் சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

அத்திக்காய்

அத்திக்காயில் விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து உள்ளது. மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும். மூலநோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது.

மாங்காய்

மாங்காயில் நார்ச்சத்து, விட்டமின் ஏ காணப்படுகிறது. மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும். இது சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

அவரைக்காய்

அவரைக்காயை உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து காணப்படுகிறது. இது உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.நீரிழிவு, செரிமானத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. யாரும் இதை இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் ஜீரணம் ஆகாது.

சுரைக்காய்

சுரைக்காயில் நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. இது உடல் சூட்டைத் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும். இது தாகத்தை அடக்கி உடலை சுத்திகரி த்து சிறுநீர் போவதை அதிக படுத்துகிறது.ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு.

இதுவும் உடலை குளுமை செய்து தாகத்தை அடக்குகிறது.இதை எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். சளித் தொல்லை உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம். இது இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும்.

சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.

பப்பாளிக்காய்

இதில் விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம் உள்ளது. மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்லது.கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு இதை சாப்பிட கூடாது.

பீர்க்கங்காய்

பீர்க்கங்காயில் நீர்ச்சத்தும் தாது உப்புகளும் காணப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் யாரும் இதை இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

கொத்தவரைக்காய்

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ள வர்களுக்கு நல்லது. சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. இதில் குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும். இதில் ருசி மட்டுமே அதிகம் உள்ளது.

வாழைக்காய்

வாழைக்காயில் கொழுப்புச் சத்து, விட்டமின் இ சத்து உள்ளது. பிஞ்சு வாழைக்காயை வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்கள் சாப்பிட நோய் கட்டுப்படும். இதை வாயு, இதய, மூட்டு வலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். மலச்சிக்கலை குறைக்கும்.

கோவைக்காய்

கோவைக்காயில் விட்டமின் ஏ சத்து உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. வாய்ப்புண், வயிற்று வலி , நாக்குக் கொப்புளம் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.

புடலங்காய்

புடலங்காயில் புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ஆகியவை உள்ளன. இது மூலநோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இதை ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி , காய்ச்சல் மற்றும் உடம்பில் எதாவது வலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

சுண்டைக்காய்

சுண்டைக்காயில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம். சுண்டைக்காய் கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும், சளியை தொல்லையை குறைக்கும்.

பலாக்காய்

இதில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதை சாப்பிட கூடாது. பலாக்காய் செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை அளிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.

Next Story
Share it