1. Home
  2. ஆரோக்கியம்

தூக்கம் வரலையா ? சீக்கிரம் தூங்க இதோ சில டிப்ஸ்..!!


ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேர தூக்கம் அவசியம் .சரியான தூக்கமில்லையென்றால் அது கடுமையான மன அழுத்தத்தினை உண்டு பண்ணி ,எந்த வேலையிலும் ஈடுபட முடியாதபடி செய்து விடும் .

1.உறங்கச் செல்லும் முன்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

2.படுக்கும் நேரத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கொண்டு அதை இருட்டில் இரண்டு நிமிடங்களுக்கு உற்று நோக்கினால் தூக்கம் கண்களை தழுவும்

3. தியானம் மற்றும் யோகாசனம் செய்யுங்கள். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். நடைப்பயிற்சி செய்வது மனதை லகுவாக்கி, உடல் ஆற்றலைச் செலவழித்து நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.உறக்கம் முக்கியம். ஆகவே, அதைத் தியாகம் செய்து வீணாக சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவழித்து வாழ்க்கையைத் தொலைக்கக்கூடாது என்று உறுதி எடுப்பது நல்லது.. மேற்கண்ட முறையை பின்பற்றி நன்றாக தூங்கி உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்

4.தூங்க போவதற்கு ஒரு அரை மணிநேரம் முன் உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்வது நல்ல ஒய்விற்கும், நீங்கள் ஏதேனும் டென்ஸ்ஷனில் இருந்தால் அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது. ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான இரவு நேர தூக்கத்திற்கு உடல் மற்றும் மனம் இரண்டையும் தயார் செய்கிறது.

5.நீங்கள் எங்கே இருந்தாலும், படுக்கப் போவதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக திரைகளைப் பார்க்காத நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். (டி.வி. செல்போன், கம்ப்யூட்டர் இல்லாத நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.) பெரும்பாலான டி.வி.கள், ஸ்மார்ட்போன்கள் வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் ப்ளூ வெளிச்சம் உங்கள் மூளையை அதிக நேரம் விழிப்பாக வைத்துக் கொண்டிருக்கும்.

Trending News

Latest News

You May Like